நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்! முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு! தீயாய் பரவும் புகைப்படம்.!
சென்னை : விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள நட்சத்திர ஜோடியான நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். '
இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

நயன்தாரா திருமணம்
ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார்.
Recommended Video

விக்னேஷ் சிவன் உறுதி
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்பட வெளியீட்டின் போது விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியில் திருமணத்தை உறுதிப்படுத்தியிருந்தார். இதையடுத்து ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளிவந்தன.

ஏற்பாடுகள் தீவிரம்
ஆனால் இப்போது இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் நடக்கவுள்ளதை அறிவித்துள்ளனர். தனியார் ஊடகம் ஒன்றுக்கு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். முதலில் திருப்பதியில் திருமணம் நடத்த இருவரும் திட்டமிட்ட நிலையில், அங்கு 150 விருந்தினர்கள் வரை திருமணத்தில் கலந்துகொள்ள திருப்பதி கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் இப்போது திருமணத்தை மகாபலிபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முதல்வருடன் சந்திப்பு
திருமணத்திற்கு முதல் நாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மிக முக்கியமான பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் நடிகர்கள் ரஜினிகாந்த் விஜய் அஜித் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இந்த திருமண வரவேற்பில் கலந்து கொள்ளவுதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்கள் திருமண அழைப்பிதழை வழங்கினார் இந்த சந்திப்பின்போது நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார் தற்போது இந்த புகைப்படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications