முதலில் உன்னை தூக்கி ஜெயில்ல வைக்கணும்.. காரை ஏத்தி கொல்ல பார்த்தியே: ஓவியாவை திட்டும் விஜய் ஃபேன்ஸ்
சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், நடிகர் விஜய் குறித்து, நடிகை ஓவியா எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.. இந்த பதிவை ஓவியா டெலிட் செய்துவிட்டாலும், இது விஜய் ரசிகர்களை கோபமூட்டியிருக்கிறது.. இதையடுத்து, முதலில் உன்னை கைது செய்து ஜெயிலில் வைக்கணும் என்று ஆவேசத்துடன் ஓவியா குறித்து பதிவிட்டு வருகிறார்கள்..
தவெக தலைவர் விஜய், கடந்த 27ம் தேதி கரூரில் பிரச்சாரம் நடத்தி விட்டு சென்றார்.. அப்போது, திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 10 பேர் குழந்தைகள் என்பது பலரையும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கிவிட்டது.

நடிகை ஓவியா
இந்த சம்பவம் இந்தியா முழுவதிலுமே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..
அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பல்வேறு தரப்பினர் விஜய்யைம், தவெகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்..
கரூர் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே நடிகை ஓவியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று பதிவிட்டார்.. இந்த பதிவானது இணையத்தில் வேகமாக பரவியது...
விஜய்யை கைது செய்யணும்
ஓவியாவின் இந்த பதிவிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு பதிவுகள் சரமாரியாக பதிவிடப்பட்டன. இதையடுத்து தனது பதிவை ஓவியா நீக்கினார். மேலும் தன்னுடைய பதிவுக்கு எதிராக வந்த விமர்சனங்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஓவியா பதிவிட்டார்.
அதாவது, விஜய்யை கைது செய்ய வேண்டும், நடந்த சம்பவத்துக்கு விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சோஷியல் மீடியாவில் வந்த கமெண்ட்களை எல்லாம் தொகுத்து, ஸ்கிரீன் ஷாட் எடுத்த ஓவியா, அவைகளை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டுவிட்டார்.. மேலும், தன்னுடைய போட்டோவை ஷேர் செய்து, "நீ விரும்பும் பெண்ணாக இரு" என்று கேப்ஷனையும் தந்திருந்தார்.
இது விஜய் ரசிகர்களிடையே மேலும் கொதிப்பை ஏற்படுத்தியது.. இதனால் மோசமாகவும், நாகரீகமற்ற வார்த்தைகளாலும், கொச்சையான பதிவுகளில் ஓவியாவை திட்ட துவங்கிவிட்டனர்.
கொல்ல பார்த்தியே
ஓவியாவை கைது செய்ய வேண்டும், ஓவியாவை இன்ஸ்டாவில் யாரும் பின்தொடர வேண்டாம், பெறப்பட்ட PAYTM தொகை ரூபாய் ரூ.200, தவெகவினர் அனைவரும் சேர்ந்து ஓவியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ரிப்போர்ட் அடிக்க வேண்டும் என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல, நீ குடிச்சிட்டு காரை ஏற்றி பல பேரை கொலை செய்ய பாத்தியே உன்னை ஏன் கைது செய்யகூடாது? இதுக்கு முன்னாடி கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் இறந்தபோது, நீ ஏதாவது பேசினாயா? முதலில் உன்னை கைது செய்ய வேண்டும்" என்பது உள்பட ஓவியாவுக்கு எதிராக சரமாரியாக கருத்துக்களை பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.
துணிச்சல் பெண் நடிகை ஓவியா
ஆனால் மற்றொருபுறம் இந்த பதிவை பலரும் வரவேற்று, ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.. இரும்பு பெண் என்பதை ஓவியா மீண்டும் நிரூபித்துவிட்டார்.. ரொம்பவும் தைரியமான பெண், உங்களை ஒரு பெண் எதிர்த்து கேள்வி கேட்டால், உடனே அந்த பெண்ணை ஆபாசமாக பேசுவதும் நடத்தையை விமர்சிப்பதும் தான் உங்களது புத்தி... இதுதான் விஜய் கட்சியின் லட்சணம் விஜய் நிர்வாகிகள் லட்சணம்? இவர்கள் எப்படி தமிழ்நாட்டை வழி நடத்துவார்கள்? என்றெல்லாம் ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார்கள்.
-
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! என்ன நடக்கும்? -
எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன் -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை











Click it and Unblock the Notifications