‛நமது’ பிரதமர் மோடி.. மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துங்க..விஜய் பட நடிகை பூஜா ஹெக்டே வாழ்த்து
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நேற்று 72வது பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் நடிகர் விஜயின் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே ‛‛ நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல் ஆரோக்கியத்துடன் ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுகிறேன்'' என கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினர். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
பல இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்திலும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவை பாஜகவினர் கொண்டாடினர்.

பிரதமர் மோடிக்கு வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், ஆளுநர்கள், உலகின் பிற நாட்டு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் வாழ்த்து
ஆளுநர் ஆர்என் ரவி, ‛‛பிரதமர் மோடியின் பிறந்த நாளில், தேச சேவையில் நீண்ட ஆரோக்கியத்துடன் அவர் வாழ தமிழக மக்களின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என தெரிவித்து இருந்தார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ‛‛பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்'' என தெரிவித்து இருந்தார். இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்டவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகை பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‛‛நமது பரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தொடர்ந்து நல் ஆரோக்கியத்துடன் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.. ஹாப்பி பர்த்டே மோடிஜி'' என கூறியுள்ளார்.

‛பீஸ்ட்’ பட கதாநாயகி
நடிகை பூஜா ஹெக்டே ஹிந்தி மற்றும் தென்இந்திய மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2010ல் ‛‛மிஸ் யூனிவர்ஸ் இந்தியா'' போட்டியில் பங்கேற்று 2ம் இடம் பிடித்தார். தொடர்ந்து மாடலிங் துறையில் இருந்த இவர் நடிகையாக மாறினார். கர்நாடகத்தை சேர்ந்த இவர் மும்பையில் வசிக்கிறார். தமிழில் ‛முகமூடி' படம் மூலம் அறிமுகம் ஆனார். சமீபத்தில் வெளியான விஜயின் ‛பீஸ்ட்' படத்திலும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications