Actress Radhika Health:: நடிகை ராதிகா திடீரென மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
சென்னை: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவரான ராதிகா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். அவர் வீடு திரும்ப இன்னும் 5 நாட்கள் வரை ஆகும் எனச் சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவர் ராதிகா.. 1978ல் வெளியான இயக்குநர் பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் ராதிகா ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தார். மேலும் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல பிற மொழி படங்களிலும் ராதிகா நடித்துள்ளார்.

தமிழக அரசு விருதுகள், நந்தி விருதுகள், பிலிம்பேர் விருதுகள் ஏகப்பட்ட விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்ன திரையிலும் கூட ஒரு கலக்கு கலக்கியவர். சித்தி, செல்லமே, வாணி ராணி என்று இவரது சீரியல்களும் தொடர்ந்து வெற்றி அடைந்து வருகிறது.
இதற்கிடையே நடிகை ராதிகா சரத்குமார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 28ம் தேதியே டெங்கு காய்ச்சல் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராதிகா அட்மிட் ஆகியிருக்கிறார். டெங்குவால் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார். இப்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ராதிகா இருக்கிறார்.
இன்னும் 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகே ராதிகா வீடு திரும்புவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ராதிகா மருத்துவமனையில் அட்மிட் ஆன செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். ராதிகா விரைந்து குணம் பெற வேண்டும் என்றும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications