Radhika Mother: நடிகை ராதிகா வீட்டில் சோகம்.. தாயார் கீதா காலமானார்! திரைத்துறையினர் இரங்கல்
சென்னை: தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை ராதிகாவின் தாயார் கீதா வயது மூப்பு காரணமாகக் காலமானார். மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியான கீதாவின் வயது 86. அவருடைய இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் 1970களில் அறிமுகமாகிப் பல ஆண்டுகள் டாப் நடிகையாக வலம் வந்தவர் ராதிகா. அதன் பிறகும் கூட சின்னத்திரை, குணச்சித்திரப் பாத்திரங்கள் என இப்போது வரையுமே கூட பிஸியாக இருந்து வருகிறார். இவரது தாயார் கீதா சென்னையில் வசித்து வந்த நிலையில், அவர் வயது மூப்பு காரணமாகக் காலமானார். மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியான கீதாவுக்கு வயது 86.

கடந்த மாதம் ராதிகா தனது பிறந்த நாளை தாயார் கீதாவை நேரில் சந்தித்து, அவருடனேயே கொண்டாடி இருந்தார். ராதிகா நேரில் சென்று, கீதா முன்னிலையில் தனது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினரும் உடன் சென்றிருந்தனர். இந்தச் சூழலில் தான் ஒரே மாதத்தில் கீதா காலமானார். வயது மூப்பு மற்றும் அது சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளால் கீதா உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகை ராதிகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், எனது தாயார் கீதா ராதா (வயது 86) அவர்கள் இன்று 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை மணிக்கு உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக எண் 3, பின்னி ரோடு, மனசாரவா அபார்ட்மெண்ட், போயஸ் கார்டன், சென்னை - 86 இல் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதி சடங்கு நாளை மாலை 4.30 மணிக்கு மேல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications