‛‛அவதூறு பேச்சு’’.. திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல் ஆணையரிடம் நடிகை ராதிகா புகார்
சென்னை: திமுகவின் மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகை ராதிகா குறித்து பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனை ராதிகா சரத்குமார் கடுமையாக கண்டித்தார். இந்நிலையில் தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை கோரி அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகாரளித்துள்ளார்.
திமுகவில் மேடை பேச்சாளராக இருப்பவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் பொதுக்கூட்ட மேடைகளில் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை கடுமையாக விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். குறிப்பாக பெண் நிர்வாகிகள் பற்றிய அவரது பேச்சு என்பது அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாகும்.

சமீபத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது சர்ச்சை பேச்சால் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாஜகவில் இருக்கும் குஷ்பு உள்ளிட்ட நடிகைகள் மற்றும் ஆளுநர் ரவி பற்றி அவர் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு சமீபத்தில் அவர் மீண்டும் திமுகவில் இணைத்து கொள்ளப்பட்டதோடு, மேடைகளில் பேசி வருகிறார். இந்நிலையில் தான் காஞ்சிபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்த நடிகர் சரத்குமாரை விமர்சனம் செய்தார். அதாவது இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக சரத்குமார் சமீபத்தில் பேட்டி கொடுத்தார். அதை கொச்சையாகவும், சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோரை அவதூறாக விமர்சனம் செய்தும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியிருந்தார்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான் தன்னை பற்றி அவதூறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராதிகா சரத்குமார் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் இந்த பேச்சை நடிகை ராதிகா சரத்குமார் கடுமையாக கண்டித்து இருந்தார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், ‛ ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே... அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்., shame on திமுக'' எனக்கூறியிருந்தார்.
மேலும் அந்த பதிவில் ராதிகா சரத்குமார் திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்திருந்தார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் அவதூறு பேச்சை முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு கொண்டு செல்லும் வகையில் ராதிகா சரத்குமார் இப்படி செய்திருந்தார். ஆனால் திமுக தரப்பில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். இதனால் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சிக்கலில் சிக்கி உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications