வியாக்கியானம் பேசிய ரஞ்சனா நாச்சியார்! வெளியே வச்சுகங்க மேடம்! விரட்டியடித்த மாங்காடு போலீஸ்!
சென்னை: நீதிமன்ற உத்தரவுப் படி சென்னை மாங்காடு காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார், அங்கு செய்தியாளர் ஒருவரிடம் வியாக்கியானம் பேசியதை பார்த்த போலீஸார் வெளியே வச்சுகங்க மேடம் எனக் கூறி காவல் நிலைய வளாகத்திலிருந்து விரட்டியடித்தனர்.
நடத்துனர், ஓட்டுநரின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் அவர்களை நாயே நாயே என கத்தி திட்டிவிட்டு கடைசியில் வியாக்கியானம் பேசிக்கொண்டிருக்கிறார் நடிகை ரஞ்சனா நாச்சியார். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கவும், மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவும் அண்ணாமலை மிகக் கடுமையாக உழைத்து ஒரு பக்கம் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், அதனை திசை திருப்பும் விதமாக ரஞ்சனா நாச்சியாரின் நடவடிக்கைகள் அமைந்துவிட்டதாக கருதுகிறது அண்ணாமலை தரப்பு.

தனது சொந்தமாவட்டமான கரூரில் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தி வரும் நிலையில் அந்தச் செய்தியை இருட்டடிப்பு செய்திருக்கிறது பாஜகவை சேர்ந்த ரஞ்சனா நாச்சியாரின் செய்திகள். இதனிடையே ஜாமினில் உள்ள ரஞ்சனா நாச்சியார், இன்று மாங்காடு காவல் நிலையத்தில் நீதிமன்ற நிபந்தனை படி கையெழுத்திட வந்த போது பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தாம் ஒன்றும் திட்டமிட்டு மாணவர்களை தாக்கவில்லை என்றும் தாம் பயணித்த கார் முன்னால் சென்ற பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியதை பார்த்ததும் மனம் கேட்காமல் தட்டிக்கேட்டதாக தெரிவித்துள்ளார்.
தனக்கு பொதுமக்கள் மத்தியிலும், பாஜகவிலும் ஆதரவு பெருகியுள்ளதாக பெருமை பேசிய ரஞ்சனா நாச்சியார், ஆதங்கத்தில் பேருந்து நடத்துனரையும், ஓட்டுநரையும் திட்டியது தவறா என்றும் தன்னை பொறுத்தவரை நியாயமாகவே நடந்துகொண்டேன் எனவும் தெரிவித்தார். படிக்கட்டில் பயணம் செய்வது ஆபத்தானது, அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. அதனால் படிக்கட்டில் பயணித்த மாணவர்களை கீழே இறங்கச் சொல்வதில் தவறில்லை. ஆனால் மாட்டை அடிப்பது போல் கண்மூடித்தனமாக பொதுவிடத்தில் அடுத்தவன் வீட்டு பிள்ளையை இழுத்துப் போட்டு தலை, கன்னம் என எதுவும் பார்க்காமல் ஓங்கி ஓங்கி அடித்ததும், ஒருமையில் பேசியதும் தான் ரஞ்சனா நாச்சியர் செய்த தவறு என பலரும் சுட்டிக்கட்டுகின்றனர்.
-
ஆரம்பமே இடிக்குதே.. திமுக லிஸ்ட்டில் வந்து சேர்ந்த தவெக.. அமித் ஷா சொன்னதை கேட்டீங்களா -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications