மனைவி குளிக்கும் போது கணவரை ஏன் வெளியே போக சொல்கிறார்?.. சித்ராவின் தோழி பரபர கேள்வி
சென்னை: மனைவி குளிக்கும் போது கணவரை ஏன் வெளியே போக சொல்கிறார் என நடிகை சித்ராவின் தோழி ரேகா நாயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ரேகா நாயர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கடந்த 3 மாதங்களாக சித்ராவை நான் எப்போது பார்த்தாலும் மிகவும் டென்ஷனாகவே இருப்பார். ஹேம்நாத் எங்கே இருக்கிறார், யார் கூட இருக்கிறார் போன்ற போன் அழைப்புகளால் அவர் எப்போதும் பரபரப்பாகவே இருப்பார்.
நாங்கள் அப்போதும் சித்ராவிடம் ஹேம்நாத்தை திருமணம் செய்து கொள்வது குறித்து யோசி என்றோம். எனக்கு இது தற்கொலை போல் தெரியவில்லை. தற்கொலைக்கு தூண்டிவிடுவதும் ஒரு கொலைதான். சித்ராவும் ஹேம்நாத்தும் பொசசிவ்னஸ் அதிகம்.

ஹேம்நாத்
இருவரும் 24 மணி நேரமும் தன்னுடனேயே நேரத்தை செலவிட வேண்டும் என நினைப்பவர்கள்தான். வெளியூருக்கு ஷூட்டிங் சென்றாலும் ஹேம்நாத்தையும் கூடவே அழைத்து செல்ல நினைப்பார் சித்ரா. என்னை பொருத்தவரையில் காதலுக்கு கண்ணில்லை. ஒரு நல்ல பையனுக்காக கூட அவர் தற்கொலை செய்திருக்கலாம்.

மூட்டை தகவல்கள்
ஹேம்நாத்தின் வாழ்க்கையே மர்மம் நிறைந்தது. அவர் யாரு, அவருடைய தாய், தந்தை யாரு, எங்கிருந்து வந்தார், எதற்காக வந்தார் என்பது எதுவும் தெரியாது. அதையெல்லாம் நாம் தேடினால் மூட்டை மூட்டையாக தகவல்கள் கிடைக்கும். என்னால சில விஷயங்களை சொல்ல முடியாது. அவர் குறித்து முழுசாக ஆராய்ந்தால் தஞ்சமடையவே வந்தவர்.

ஆடியோ கால்
இன்னும் எத்தனை பேரின் வாழ்க்கையை கெடுக்க காத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. இதற்கு முன்னர் கூட இவரால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்கள். தேடினால் கண்டுபிடிக்கலாம். ஒரு 6 மதங்களாக எப்போதும் பரபரப்பாக இருப்பார். போன், வீடியோ கால், ஆடியோ கால் என இருப்பார். எல்லா நேரங்களிலும் டென்ஷனாகவே இருந்தார் சித்ரா.

சித்ரா குளிக்க..
இன்னொன்றை நீங்கள் யோசித்து பாருங்கள், பொதுவாக ஒரு காதலர்கள் ஹோட்டலுக்கு சென்றாலே ஒன்றாகத்தான் சாப்பிடுவார்கள், ஒன்றாகவே குளிப்பார்கள். சித்ரா விஷயத்தில் ஏற்கெனவே இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. ஹேம்நாத் சொல்வது போல் பதிவு திருமணமும் முடிந்திருப்பதால் இவர்கள் கணவன் மனைவி, அப்படியிருக்கையில் சித்ரா குளிப்பதற்காக ஹேம்நாத்தை ஏன் வெளியே அனுப்ப வேண்டும்? சித்ராவே சொல்லியிருந்தாலும் இவர் ஏன் வெளியே போக வேண்டும்?

கொலையா?
சித்ராவின் மரணம் கொலையா, தற்கொலையா, தற்கொலை செய்ய வைக்கப்பட்டாரா என்பதை விசாரணை முடிவுகளில் கண்டுபிடிக்க வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கை வரட்டும். அப்போதுதான் யார் குற்றவாளி என்ன நடந்தது என்பது தெரியும். அவர் தற்கொலை செய்து கொள்ளும் நபரே கிடையாது. அவருக்கு துன்புறுத்தல் நடந்திருக்கிறது, அது என்னவென கண்டுபிடிக்க வேண்டும்? என்றார் ரேகா நாயர்.












Click it and Unblock the Notifications