Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாடி ஷேமிங்! கவுரி கிஷனுக்கு ஆதரவாக படக் குழு கூட நிற்கலையே! நடிகை ரோகிணி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கவுரி கிஷனின் எடை என்ன என கேட்டு உருவ கேலி செய்ததை வன்மையாக கண்டிப்பதாக நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார். மேலும் தனது தரப்பு நியாயத்தை கூட சொல்ல விடாமல் கிஷனை பத்திரிகையாளர் ஒருவர் கடுமையாக பேசியதை அங்கிருந்த ஒருவர் கூட தட்டி கேட்காதது அதிர்ச்சியாக இருக்கிறது என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நடிகை கவுரி கிஷனின் எடை என்ன என கேட்டு உருவ கேலி செய்ததையும் அவர் தரப்பு கருத்தை வெளிப்படுத்த அனுமதிக்காததையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

gouri kishan chennai

அந்த செய்தியாளர் கேட்டது நகைச்சுவைக்காகவோ படத்திற்கு தொடர்புடைய கேள்வியோ கிடையாது. அந்த செய்தியாளருடன் கிஷன் வாக்குவாதம் செய்த போது அவருக்கு ஆதரவாக யாரும் பேசாதது அவமானமாக இருக்கிறது. மீடியாவும் படக்குழுவினரும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறார்கள்.

அதற்காக ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினர் அவமானப்படுத்தும் போது அமைதியாக இருக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. கவுரி தனது தரப்பு நியாயத்தை பேச முற்படும் போது அவரை தான் ஒரு பத்திரிகையாளர் என சொல்லிக் கொள்ளும் நபர் பேசவிடாமல் கத்தி பேசி அவரை தடுப்பது தெளிவாக தெரிகிறது.

இந்த விஷயத்தில் நான் கவுரிக்கு ஆதரவாக நிற்கிறேன். தனி பெண்ணாக தைரியமாக அந்த பிரஸ் மீட்டில் வாக்குவாதம் செய்ததற்கு கிஷனுக்கு நன்றி என தெரிவித்திருந்தார்.

96 படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் கவுரி கிஷன். இவர் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் நடித்த அதர்ஸ் எனும் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது இந்த படத்தின் பாடல் காட்சியில் கிஷனை தூக்கினீர்களே அவரது உடல் எடை என்ன என ஹீரோ ஆதித்ய மாதவனிடம் ஒரு யூடியூபர் கேள்வி கேட்டார்.

இந்த நிலையில் ஒரு யூடியூப் சேனலுக்கு கிஷன் பேட்டி அளித்த போது, ஒருவர் உங்களது எடை என்ன என கேட்டாரே, அது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டது. அதற்கு கிஷன், அந்த பத்திரிகையாளர் கேட்டது ரொம்ப தவறு. அவர் மூளை இல்லாதவர் மாதிரி பேசியிருந்தார். நான் அவர் நம்பரை வாங்கி பேசலாம்னு நினைத்தேன். ஆனால் அது வெறும் வாதமாக மாறுமே தவிர, அவர் மாற போவது இல்லை.

அவர் என் எடை குறித்த கேள்வியை ஏன் கேட்டார் என தெரியவில்லை. நடிகைகளின் திறமையைவிட்டுவிட்டு உடல் எடை, அழகு குறித்தெல்லாம் பேசுறது சரியில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, கிஷன் பத்திரிகையாளர் குறித்து அப்படி பேசியதற்கு சம்பந்தப்பட்ட அந்த நபர் கேள்வி எழுப்பினார்.

அப்போது கிஷன், "ஓ என் வெயிட் குறித்து கேட்டது நீங்கள்தானா?" என மிகவும் சாந்தமாக கேட்டார். அதற்கு அந்த யூடியூபர் கத்தி கூப்பாடு போட்டார். "என் வெயிட் கேட்டு என்ன செய்ய போறீங்க"னு கேட்டதற்கு அந்த யூடியூபர், "உடல் எடையை குறைக்கிறேன் சொல்ல வேண்டியதுதானே. நீங்கள் நடிகை உங்களிடம் மோடி, டிரம்ப் குறித்தா கேட்க முடியும்" என எல்லை மீறி பேசியிருந்தார்.

அந்த யூடியூபர் பேசும் போது பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கிஷன், "இப்போ நான் பேசலாமா" என கேட்டுவிட்டு அவர் பேசுகையில் "என் உடல் எடையை நீங்கள் கேட்டது பாடி ஷேமிங்தான். நான் எவ்வளவு வெயிட் இருந்தால் உங்களுக்கு என்ன, படத்தில் என் நடிப்பு, திறமை, கேரக்டர் குறித்து கேட்டிருக்கலாமே. எனவே நீங்கள் கேட்டது முட்டாள்தனமான கேள்விதான்" என்றார்.

அவர் மேலும் சில விஷயங்களை விவாதிக்க முற்பட்ட போது அந்த யூடியூபரும் சில யூடியூபர்களும் சேர்ந்து கிஷனை பேச விடாமல் கத்தி கூப்பாடு போட்டனர். அப்போது அவருடன் இருந்த பட குழுவோ அல்லது பத்திரிகையாளர்களோ கிஷனுக்கு ஆதரவாக நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் அந்த யூடியூபர் "நீங்கள் பேசியதற்கு மன்னிப்பு கேளுங்கள்" என்றார்.

அதற்கு கிஷன் தைரியமாக, "நான் ஏன் சார் மன்னிப்பு கேட்கணும், நீங்கள் கேட்ட கேள்விக்கு நீங்கள்தான் மன்னிப்பு கேட்கணும்" என்றார். பின்னர் எல்லா யூடியூபர்களும் கத்த ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் தன்னால் தனது தரப்பு கருத்தை வலிமையாக எடுத்து வைக்க முடியவில்லையே என்பதை எண்ணி, கிஷன் கண்ணீர் விட்டார். இந்த நிலையில் கிஷனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+