Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Palak பன்னீரில் சிக்கன்! சாப்பிட்டு அதிர்ச்சி அடைந்த நடிகை சாக்ஷி அகர்வால்! ஸ்விக்கி மீது புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறந்த போதிலிருந்தே அசைவம் சாப்பிடாமல் என்னை பன்னீர் என்ற பெயரில் சிக்கன் சாப்பிட வைத்ததாக ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனம் மீது நடிகை சாக்ஷி அகர்வால் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார்.

நடிகை சாக்ஷி அகர்வால் சென்னையில் கதீட்ரல் சாலை அருகே ஒரு அபார்ட்மென்டில் தங்கியிருக்கிறார். அவர் மதிய உணவை உட்கொள்வதற்காக ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனத்தில் பாலக் பன்னீரை ஆர்டர் செய்துள்ளார்.

sakshi agarwal chennai

அத்துடன் மெயின் டிஷ்ஷாக சிறுதானிய பிரியாணியை ஆர்டர் செய்தார். பசியோடு இருந்த அவருக்கு ஆர்டரும் வந்து சேர்ந்தது. ஆசை ஆசையாக ஆர்டரை வாங்கி சாப்பிட தயாரானார்.

அப்போது சிறுதானிய பிரியாணியை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இடை இடையே பாலக் பன்னீரையும் தொட்டுக் கொண்டிருந்தார். பன்னீரை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு பன்னீர் பீஸ் வித்தியாசமாக இருந்தது.

பன்னீரை போல் சாப்ட்டாக இல்லாமல் நசக் நசக் என இருந்தது. இதனால் அந்த பன்னீர் பீஸ் மீது சந்தேகம் வந்து அதை எடுத்து பார்த்தார். அப்போதுதான் அது சிக்கன் பீஸ் போல் இருந்தது. உடனே முகர்ந்து பார்த்தார். சிக்கன் வாடை அடித்தது.

இதனால் சாக்ஷி அதிர்ச்சி அடைந்தார். உடனே அதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஸ்விக்கி நிறுவனத்தை டேக் செய்திருந்தார். மேலும் பிறந்ததில் இருந்து அசைவம் சாப்பிடாத தன்னை பன்னீருக்கு பதிலாக சிக்கன் சாப்பிட வைத்துவிட்டதாக ஸ்விக்கி மீது சாக்ஷி அகர்வால் புகார் அளித்துள்ளார்.

உணவு நிறுவனங்களில் உணவை வாங்கினால் அதில் பூரான், பல்லி, கரப்பான்பூச்சி, புழு, பிளாஸ்டிக் கவர், துருப்பிடித்த இரும்பு உள்ளிட்டவை இருந்ததாக ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளன. அது போல் ஆர்டர் மாற்றி டெலிவரி செய்ததாகவும் கூட புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் பன்னீரில் சிக்கன் கலந்திருப்பதாக சொல்லப்படுவது விந்தையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு கூட இவருடைய சொகுசு காரை யாரோ ஒரு நபர் இடித்துவிட்டு சென்றதாக பரபரப்பு புகாரை சாக்ஷி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும் நாயகியாகவும் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவர் தனது பால்யகால நண்பரும் காதலருமான நவ்னீத் மிஸ்ராவை திருமணம் செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் கோவாவில் இவர்களது திருமணம் நடந்தது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின்- லாஸ்லியா காதல் டிராக் காரணமாக சாக்ஷி அகர்வால் அந்த சீசனில் பிரச்சனைகளை ஏற்படுத்தியிருந்தார்.

இவர் ராஜஸ்தான் தந்தைக்கும் பஞ்சாபை சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஐடி பிரிவில் இளங்கலை தங்கப் பதக்கம் பெற்றார். பின்னர் விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் ரஜினியின் காலா படத்திலும், அஜித் நடித்த விஸ்வாசம் படத்திலும், அரண்மனை 3 படத்திலும் நடித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+