சென்னை கதீடரல் சாலையில் விபத்தில் சிக்கிய நடிகை சாக்ஷி அகர்வாலின் சொகுசு கார்! நடந்தது என்ன?
சென்னை: சிக்னலில் காத்திருந்த போது வேறு ஒரு கார் மோதியதில் நடிகை சாக்ஷி அகர்வாலின் காருக்கு லேசான சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும் இரு கார்களில் இருந்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
சென்னை கதீரடல் சாலை அருகே நடிகை சாக்ஷி அகர்வால் தனது பென்ஸ் காரில் படப்பிடிப்பிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது சிக்னலில் நின்று கொண்டிருந்த போது வேறு ஒரு சிறிய கார், வளையும் போது இவரது காரில் உரசி விபத்தை ஏற்படுத்தியது.

நல்வாய்ப்பாக இரு கார்களிலும் இருந்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அவருடைய காரில் உரசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும் நாயகியாகவும் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவர் தனது பால்யகால நண்பரும் காதலருமான நவ்னீத் மிஸ்ராவை திருமணம் செய்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் கோவாவில் இவர்களது திருமணம் நடந்தது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின்- லாஸ்லியா காதல் டிராக் காரணமாக சாக்ஷி அகர்வால் அந்த சீசனில் பிரச்சனைகளை ஏற்படுத்தியிருந்தார்.
இவர் ராஜஸ்தான் தந்தைக்கும் பஞ்சாபை சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஐடி பிரிவில் இளங்கலை தங்கப் பதக்கம் பெற்றார். பின்னர் விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் ரஜினியின் காலா படத்திலும், அஜித் நடித்த விஸ்வாசம் படத்திலும், அரண்மனை 3 படத்திலும் நடித்திருந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications