சனம் ஷெட்டி புகார்.. பிக்பாஸ் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்கு.. கைது செய்யப்படுவாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலித்து ஏமாற்றியதாக சனம் ஷெட்டி அளித்த புகாரை ஏற்று பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது பெண் வன்கொடுமை சட்டம், மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இதனால் தர்ஷன் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வந்திருக்கிறார்.. இருவருக்கும் திருமணம் கூட நிச்சயிக்கப்பட்டிருந்தது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை சனம் ஷெட்டி. இந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்த பின்னர் தர்ஷனும், சனம் ஷெட்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் பிரிந்துவிட்டார்கள். இதனால் வருத்தம் அடைந்த சனம் ஷெட்டி தனக்கும், தர்ஷனுக்கும் நடந்த நிச்சயதார்த்தத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

சனம் ஷெட்டி புகார்

சனம் ஷெட்டி புகார்


தன்னை தர்ஷன் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதுடன், உடலாலும், மனதாலும் துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டினார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், இதுபற்றி நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார்.

மிரட்டினார்

மிரட்டினார்

சனம் ஷெட்டி அளித்த புகாரில், 2 ஆண்டுகளாக காதலித்து, திருமணம் நிச்சயம் செய்து விட்டு, பின்னர் திருமணம் செய்ய தர்ஷன் மறுக்கிறார். என்னையும் மிரட்டுகிறார் எனவே தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

விடிய விடிய பார்டி

விடிய விடிய பார்டி

சனம் ஷெட்டி தன் மீது புகார் தெரிவித்த போது தர்ஷன் செய்தியாளர்களை சந்தித்து தன் தன் தரப்பு நியாயத்தை விளக்கம் அளித்தார். தான் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது சனம் தன் முன்னாள் காதலருடன் சேர்ந்து விடிய, விடிய பார்ட்டி பண்ணியதாக தர்ஷன் குற்றம்சாட்டினார். இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்படுவாரா?

கைது செய்யப்படுவாரா?

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி அளித்த புகரை ஏற்று. அடையாறு மகளிர் காவல்நிலையத்தில், பெண் வன்கொடுமை சட்டம், மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தர்ஷன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+