“மைக்கை பிடுங்கிட்டு துரத்திட்டாங்க.. இது ஒரு போலி போராட்டம்” - கொந்தளித்த நடிகை சனம் ஷெட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட் மேடையில் பேசிய நடிகை சனம் ஷெட்டி, போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் வெளியேறினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சனம் ஷெட்டி, "பேசிக் கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிவிட்டு துரத்துகிறார்கள். இதுதான் ஜனநாயகமா? இது ஒரு போலி போராட்டம்" எனக் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் எதிரொலியாக தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Actress Sanam Shetty Forced to Leave Anti-NEET Protest Calls It a Fake Protest

சென்னையில், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் இளைஞர்கள், மாணவர்களின் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வியாழக்கிழமை வெளியானது. முதலமைச்சர் விஜய், தவெக அமைச்சர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை ஜனநாயகன் பார்த்து கொண்டாடி வருவது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

இதற்கிடையே, மாணவர்களின் போராட்டத்திற்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகை சனம் ஷெட்டி வெள்ளிக்கிழமை இரவு, மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்று இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரித்தார்.

போராட்ட மேடையில் ஏறிப் பேசிய நடிகை சனம் ஷெட்டி, "இது மாணவர்களின் போராட்டம். இங்கு பேசிய சிலரின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த மேடையை அரசியல் ரீதியாக பயன்படுத்துபவர்கள் தான் ஜோக்கர்கள். நாங்கள் கிடையாது. நான் விஜய்யின் தீவிர ரசிகை. நேற்று நான் 'ஜனநாயகன்' படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்." என்றார்.

சனம் ஷெட்டியின் இந்தப் பேச்சுக்கு, போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அவரது பேச்சை நிறுத்துமாறு கோஷமிட்டனர். "நான் பேசவா போகவா?" என சனம் ஷெட்டி கேட்க, "போயிடுங்க" என போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். இதனால் கோபமடைந்த சனம் ஷெட்டி, "இது பேச்சுரிமையை பறிக்கும் செயல். எவனும் சொல்லி நான் இங்கு வரவில்லை. நானாக வந்திருக்கிறேன். மாணவர்களுக்காகப் பேசுவேன்" என்றார்.

கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறினார் சனம் ஷெட்டி. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சனம் ஷெட்டி, "பேசிக் கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிவிட்டு துரத்துகிறார்கள். இதுதான் ஜனநாயகமா? இது ஒரு போலி போராட்டம்." எனக் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+