உங்களை சிஎம் ஆக்கியவர்கள் ரோட்டில் நிற்காங்க.. முதல்வர் விஜய்க்கு எதிராக ஷனம் ஷெட்டி கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையில் 12வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஷனம் ஷெட்டி, உங்களை சிஎம் பதவியில் உட்கார வைத்த மக்கள் இன்று ரோட்டில் நிற்கிறார்கள். அவர்களை வந்து நீங்க பார்க்க வேண்டும் என கூறினார்.

மேலும், போன ஆட்சியில் ஆரம்பித்த இந்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு இல்லை என்பது வருத்தமாக உள்ளது. போன வருஷம் நம்ம முதல்வர் விஜய், தூய்மை பணியாளர்களை நேரில் அழைத்து நான் உங்க கூட இருக்கேன்.. உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் இருக்கேன். உங்க கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று சொல்லியிருந்தாங்க.. எனவே முதல்வர் விஜய் இங்கு வந்து தூய்மை பணியாளர்களை சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.

Actress Sanam Shetty urges CM Vijay to meet sanitation workers in person and hear their demands

தூய்மை பணியாளர்கள் போராட்டம்

பணி நிரந்தரம், தனியார்மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் இன்று 12 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் விஜய் எங்களை சந்திக்க வேண்டும் என்றும், எங்கள் கோரிக்கைகளை கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள். இன்று ஷனம் ஷெட்டி தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பதாகை ஏந்தியபடி அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த முறை இதே இடத்தில் தூய்மை பணியாளர்களுக்காக நான் போராட்டத்தில் பங்கேற்றேன். அவங்க கூட நிற்பது என் கடமை. இப்போது ஆட்சி மாறியதால் அவங்க கூட எதற்கு நிற்க வேண்டும், நாம் ஏன் போக வேண்டும் என்ற மனசாட்சி இல்லாத பெண் நான் கிடையாது. இப்போதும் அதே கோரிக்கைகளோடு அவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். போன ஆட்சியில் ஆரம்பித்த இந்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு இல்லை என்பது வருத்தமாக உள்ளது.

மக்கள் ரோட்டி நிற்கிறார்கள்

12 நாளாக இந்த போராட்டம் நடக்கிறது. நான் ஊரில் இல்லை. இல்லையென்றால் அப்போதே வந்திருப்பேன். போன வருஷம் நம்ம முதல்வர் விஜய், தூய்மை பணியாளர்களை நேரில் அழைத்து நான் உங்க கூட இருக்கேன்.. உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் இருக்கேன். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று சொல்லியிருந்தாங்க.. இப்போது தூய்மை பணியாளர்கள், சார் நீங்க வந்து எங்களை சந்திக்கனும் என்று சொல்வது நியாயமான கோரிக்கை.. எனவே சிஎம் சார் கண்டிப்பாக நீங்க இங்க வந்து உங்க மக்களை பார்த்து பேசுங்க..

உங்களை இன்று சிஎம் ஆக உட்கார வைத்த மக்கள் ரோட்டி நிற்கிறார்கள். அவர்களை நீங்கள் வந்து பார்க்க வேண்டும். உங்க அமைச்சர்கள் ராஜ்மோகன் எல்லாரும் வந்து பேசிட்டு தான் இருக்காங்க. சட்டசபையிலும் இந்த பிரச்சினை பற்றி பேசத்தான் செய்கிறார்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாங்கள் போராடுவோம் என தூய்மை பணியாளர்கள் சொல்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களோடு சேர்ந்து முதல்வர் விஜய் இதனை சீக்கிரமாக பரிசீலித்து அறிவிப்பு கொடுங்கள்.

எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ

பணி நிரந்தரம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். இது நியாயமான கோரிக்கை தான். சென்னை மாநகராட்சியை தனியார் மயம் ஆக்க வேண்டும் என்பது இன்றைக்கு நேற்றைக்கு எடுத்த முடிவு இல்லை. 30 ஆண்டுகளாக இந்த முடிவு இருக்கிறது. திமுக ஆட்சியில் ஆரம்பித்த பிரச்சினை இது. இவ்ளோ நாட்கள் சரி செய்யாமல் இருந்துவிட்டு இப்போது 3 மாதத்தில் சரி செய்வது என்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் சாத்தியம் இல்லாதது இல்லை. எனவே இந்த ஆட்சியில் இந்த கோரிக்கையை செய்வார்கள் என நம்புகிறேன்.

இங்கு பாதிக்கப்படுவது நீங்களோ, நானோ இல்லை.. தூய்மை பணியாளர்கள். அவர்கள் தினமும் வேலையை முடித்துவிட்டு இங்கே வந்து போராட்டம் நடத்திட்டு இருக்காங்க. தினமும் இங்கே வந்து போராடுவது இவர்களுக்கு சிரமம். தவெக தேர்தல் வாக்குறுதியில் 5 வருஷம் இருக்கிறவர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதாக கூறியுள்ளனர். பணி நிரந்தரம் செய்ய டைம் எடுக்கும் என்பது எனக்கு புரிகின்றது. நான் ஒரு சகோதரியாக சொல்கிறேன். எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதனை செய்து கொடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+