Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக ஆட்சியில் மகளிருக்கு முக்கியத்துவம்.. ஆண்களுக்கு இதை கற்றுகொடுங்கள்.. நடிகை சங்கீதா பேச்சு!

திமுக ஆட்சி பற்றி நடிகை சங்கீதா பேசிய வார்த்தைகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார். அதேபோல் பெண் குழந்தைகளுக்கு தைரியத்தை கற்றுக் கொடுங்கள் என்றும், ஆண் பிள்ளைகளுக்கு, பெண்களை மதிக்கச் சொல்லி கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சங்கீதா கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி திமுக சார்பாக பல்வேறு மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை துறைமுகம் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் விஜய் நடித்த வாரிசு படத்தில் நடித்த நடிகை சங்கீதா கலந்துகொண்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. இதுவரை கட்சி சார்ந்த எந்த நிகழ்ச்சிகளிலும் நடிகை சங்கீதா கலந்துகொண்டதில்லை. இந்த நிலையில் திமுக நிகழ்ச்சியில் முதல்முறையாக நடிகை சங்கீதா கலந்துகொண்டார்.

திமுக மேடையில் நடிகை சங்கீதா

திமுக மேடையில் நடிகை சங்கீதா

இந்த விழாவில் நடிகை சங்கீதா பேசுகையில், கேமராவிற்கு முன் நடிக்க சொன்னால் பயங்கரமாக தைரியம் வரும். மிகவும் தைரியசாலி என்று சினிமா துறையில் என்னைப் பற்றி கூறுவார்கள். ஆனால் அரசியல் மேடையில் பெரிய பெரிய அரசியல் பிரமுகர்கள் முன் பேச வேண்டும் என்று சொன்ன பின் அதிகமாக உதறல் எடுக்கிறது. அரசியல் என்பதே புனிதமான வார்த்தை. சுயநலமாக இல்லாமல் மற்றவர்களுக்காக செய்யும் பணி. அந்த குணமே கடவுளுக்கு சமமானது. அதனை காலம் காலமாக செய்கிறார்கள். அதனாலேயே இங்கிருப்பவர்கள் மீது அதிக மரியாதை இருக்கிறது.

அண்ணன் சேகர்பாபு

அண்ணன் சேகர்பாபு

இந்த காலத்தில் அரசியல் என்பது கேலி வார்த்தையாக மாறிவிட்டது. யாராவது நல்ல விஷயம் செய்தால் கூட, அதனையும் யாராவது தூரத்தில் இருந்து கேலி செய்து கொண்டே இருப்பார்கள். யாரையும் தனிப்பட்டு சொல்ல விரும்பலை. மற்றவர்களை கேலி செய்வதே ட்ரெண்டாக இருக்கிறது. மற்றவர்கள் கேலி செய்வதன் மூலம் ட்ரெண்டாகி அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதைவிட கேவலமான விஷயம் எதுவும் இல்லை. ஒரு மாதத்திற்கு 90 விழாக்கள் நடத்துவதாக அமைச்சர் சேகர்பாபு கூறிய போது, ஆச்சரியமாக இருந்தது. சேகர்பாபு அண்ணன் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது.

மு.க.ஸ்டாலின் வளர்ச்சி

மு.க.ஸ்டாலின் வளர்ச்சி

அரசியல் என்றாலே பயமும், கூச்சமும் இருக்கும். ஆனால் அண்ணன் சேகர்பாபு அழைத்தால் எங்கென்றாலும் வருவேன். மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்கிறார்கள். அண்மையில் கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி கண்காட்சிக்கு அழைத்து சென்றார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. அடிப்படை தொண்டர் தொடங்கி இளைஞரணி செயலாளர், பொருளாளர், தலைவர், இப்போது முதலமைச்சர் என்று மு.க.ஸ்டாலின் வளர்ந்துள்ளார். இன்னாரின் மகன் என்பதால் அங்கு சென்று அமரவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினின் வளர்ச்சிக்கு அவரின் உழைப்புதான் காரணம்.

குழந்தை வளர்ச்சி

குழந்தை வளர்ச்சி

அதேபோல் திமுக ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கவுன்சிலர்களில் 50 சதவிகிதம் பெண்கள் என்பது சந்தோஷம். நமது மேயர் பிரியா இன்னொரு பெருமை. பெண்கள் என்றாலே பொறுப்பு இருக்கிறது. ஏனென்றால் ஒரு குழந்தையை பெற்று வளர்க்கிறோம். பெண் குழந்தைகளை தைரியமாக வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை சிறு வயதில் இருந்தே சொல்லி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+