Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசன் கட்சியில் சேர ஆர்வமாக இருக்கிறேன் என்று நடிகை ஷகீலா விருப்பம் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார். கமல் என்பதாலோ என்னவோ தெரியவில்லை. இந்தக் கட்சியில் நடிகை ஸ்ரீப்ரியா, கவிஞர் சினேகன், இயக்குனர் அமீர் உள்பட நிறைய சினிமா பிரபலங்கள் இணைந்திருக்கிறார்கள்.

நேரடியாக கட்சியில் யாரும் உறுப்பினராக இல்லாவிட்டாலும், கமலுக்கு சினிமா உலகில் நிறைய சப்போர்ட் எப்போதுமே இருக்கிறது. பெரும்பாலும் யாரும் அதை வெளிப்படுத்தாமல் உள்ளனர்.

நடிகை ஷகிலா

நடிகை ஷகிலா

ஒருபக்கம் நடிகர்கள் நடிப்பில் கிடைக்கும் புகழை தக்க வைத்து கொள்ள சினிமாவில் ரிடையர் ஆனவர்கள் எல்லாம் அரசியலுக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை ஷகீலாவும் வந்துவிடுவார் போல இருக்கிறது.

ஆபாச பெண் கேரக்டர்

ஆபாச பெண் கேரக்டர்

செய்தியாளர்களிடம் தன் திரையுலக வாழ்க்கை குறித்து நடிகை ஷகீலா ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், சில விஷயங்களை மனம்விட்டு பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: "ஷகிலா என்றாலே ஆபாச பெண் கேரக்டரில் நடிப்பவர் என்பதுபோல் முத்திரை குத்தி விட்டார்கள்.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

குடும்பத்துக்காகவே கவர்ச்சி நடிப்புக்கு நான் தள்ளப்பட்டேன். ஆனால் குடும்பத்தில் இருந்த ஒருவரே என்னை ஏமாற்றி சம்பாதித்த எல்லாத்தையும் பிடுங்கி கொண்டார். அதனால் தற்கொலை முயற்சியில் கூட இறங்கினேன்.

ஆர்வமாக இருக்கிறேன்

ஆர்வமாக இருக்கிறேன்

நிறைய படங்களை நான் விரும்பி பார்ப்பேன். நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகை. வீட்டில் ஓய்வாக இருக்கிற நேரத்தில் எல்லாம் அவருடைய படங்களைத்தான் விரும்பி பார்ப்பேன். அவரது கட்சியில் சேரவும் ரொம்ப ஆர்வமாக இருக்கிறது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+