மலையாள திரையுலக பவர் குரூப்பில் நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி.. நடிகை ஷகிலா பரபரப்பு தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து திரையுலகத்திலும் ஒரு பவர் குரூப் உண்டு. அது போல் மலையாளத்தில் முகேஷ், மோகன்லால், மம்முட்டி போன்றவர்கள் அந்த பவர் குரூப்பில் இருப்பதாக நடிகை ஷகிலா விமர்சித்துள்ளார்.

மலையாள படங்களில் நடித்து வந்தவர் ஷகிலா. தமிழில் கூட காமெடி ரோலில் நடித்துள்ளார். இவருக்கு முத்து திரைப்படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது. மலையாள திரையுலகில் பாலியல் அத்துமீறல்கள் நடந்தது குறித்து ஹேமா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

hema committee report malayalam cinema

அந்த அறிக்கையில் மலையாள திரையுலகம் 15 பேர் கொண்ட மாபியாக்களின் பிடியில் சிக்கியிருப்பதாக நடிகைகள் குற்றம்சாட்டுகிறார்கள். நடிகைகளை அரைக்குறை ஆடைகளில் தேவையின்றி நடிக்க வற்புறுத்துகிறார்கள். அது போல் ஒரு நடிகர், தன்னை கட்டிப் பிடிக்கும் காட்சியில் நடிப்பதற்கு 17 முறை ரீடேக்குகள் வாங்கியதாகவும் நடிகை குற்றம்சாட்டியிருந்தார். அது போல் சம ஊதியம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என நடிகைகள் குற்றம்சாட்டினர்.

உடை மாற்ற வேண்டும் என்றாலும் கூட எங்காவது மரத்தின் பின்புறம் நின்று மாற்றும் அவலம் இருப்பதாகவும், மாதவிடாய் சமயத்தில் நாப்கின் மாற்ற கூட முடியாமல் தவிப்பதாகவும் நடிகைகள் புகாரில் தெரிவித்திருந்தனர். அது போல் கழிப்பறை இல்லாததால் நடிகைகள் ஷூட்டிங்கில் தண்ணீர் குடிப்பதே இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது. மேலும் சம ஊதியம், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு ஹேமா கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில் ஹேமா அறிக்கை வெளியானதை அடுத்து நடிகை ஷகிலா, கூறியிருப்பதாவது: கலாபவன் மணி நடித்த ஒரு படத்தில் எனக்கு பணிப்பெண் வேடம் கொடுக்கப்பட்டது. அந்த படத்தில் ஹீரோயினாக ரூபஸ்ரீ நடித்தார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. காலையில் அவர் ஊருக்கு புறப்பட வேண்டும். கெஸ்ட் ஹவுசில் எங்கள் இருவருக்கும் எதிரெதிர் அறைதான். அப்போது இரவில் ஒருவர் ரூபஸ்ரீ அறையை தட்டினார். தூக்கத்தில் இருந்த எனக்கு அவரது அறை நான் தடதடவென கதவு தட்டியதால் அதிர்ச்சி அடைந்தேன்.

உடனே நான் என் அறைவந்து கதவை திறந்த போது ரூபஸ்ரீயை வெளியே வரும்படி சப்தம் போட்டு கொண்டிருந்தார். இதை பார்த்ததும் நான் அவரை விரட்டி அடித்தேன். பிறகு கெஸ்ட் ஹவுஸ் ஊழியர் ஒருவரும் எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தார். பின்னர் காலையில் ரூபஸ்ரீயை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் நடிகை ரேஷ்மா, மரியா ஆகியோரையும் வன்கொடுமை சம்பவத்தில் இருந்தும் நான் காப்பாற்றியுள்ளேன். அனைத்து திரையுலகத்திலும் பவர் குரூப் உள்ளது. மலையாளத்தில் நடிகர்கள் முகேஷ், மோகன்லால், மம்முட்டி போன்றவர்களும் அதில் முக்கியமானவர்கள் என ஷகிலா கூறியிருந்தார்.

மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க தலைவராக இருந்தவர் மோகன்லால். பாலியல் புகார்கள் கிளம்பியதால் அந்த நடிகர் சங்கத்தின் 17 உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததால் பெரும் சர்ச்சை எழுந்த நிலையில் ஒவ்வொரு நடிகையாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து புகார் அளித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+