'தளபதி'.. 'தலைவர்'.. என்று அழைக்கச் சொன்னார்கள்! ஸ்டாலினை 'அண்ணா' என்று நான் அழைத்தேன் -நடிகை ஷோபனா
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கச் சென்ற போது, தன்னுடன் வந்தவர்கள் அவரை தலைவர் என்றும் தளபதி என்றும் அழைக்கச் சொன்னதாகவும் ஆனால் அவரை தாம் 'அண்ணா' என அழைத்ததாகவும் நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார்.
இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், ஆவணப்படம் எடுப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்த 30 நாட்களில் தமிழக அரசு தனக்கு அனுமதி வழங்கியதாகவும் பாராட்டினார்.

முதலமைச்சர் பிறந்தநாள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை மார்ச் மாதம் முழுவதும் கொண்டாடுவதோடு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை இடைவிடாமல் நடத்தி வருகிறார் அமைச்சர் சேகர்பாபு. ஒவ்வொரு விழாவுக்கும் ஒவ்வொரு ஆளுமைகளை, பிரபலங்களை அழைத்து வந்து பேச வைக்கிறார். அந்த வகையில் நடனக் கலைஞரும், நடிகையுமான ஷோபனாவை அழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியை நடத்திய அமைச்சர் சேகர்பாபு அவர் கைகளால் நலத்திட்ட உதவிகளை வழங்க வைத்தார்.

நடிகை ஷோபனா
இதனிடையே அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஷோபனா, தாம் சினிமா துறையில் இருப்பதால் அதிமுக ஆட்சியில் கோவில்களில் ஆவணப் படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்ததாகவும் திமுக ஆட்சி அமைந்த பிறகு ஆவணப்பட எடுக்க அனுமதி கோரி விண்ணப்பித்த 30 நாட்களில் தனக்கு அனுமதி கிடைத்ததாகவும் பாராட்டினார். முதலில் திமுக அரசு மீதும் தமக்கு நம்பிக்கையில்லாமல் தான் விண்ணப்பித்ததாகவும் ஆனால் எதிர்பாராத வகையில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார்.

அண்ணா என அழைத்தேன்
அதைத் தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலினை தாம் சந்தித்து பேசச் சென்ற போது, அவரை என்ன சொல்லி அழைப்பது என தாம் குழம்பியதாகவும் அப்போது தன்னுடன் வந்தவர்கள் 'தலைவர்' என்றும் 'தளபதி' எனவும் அழைக்குமாறு அறிவுறுத்தியதாக கூறினார். ஆனால் தாம் அவரை 'அண்ணா' என அழைத்ததாகவும் தன்னை சந்திக்க வருபவர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதில் அவர் தீவிரம் காட்டுவதாகவும் புகழாரம் சூட்டினார்.

அரசியல் கட்சி
அரசியல் வாசமே தெரியாத பல சினிமா பிரபலங்கள் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டி அவருக்காக அமைச்சர் சேகர்பாபு நடத்தும் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருவது கவனிக்கத்தக்கது. அண்மையில் நடிகை சங்கீதா ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இப்போது நடிகை ஷோபனா பங்கேற்றுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications