‛‛மூடிட்டு போடா’’.. கேள்விகேட்ட நெட்டிசனுக்கு ஸ்ருதி ஹாசன் சொன்ன பதில்! ஷாருக்கானுக்கு ஊமை குத்து?
சென்னை: இன்ஸ்டாகிராமில் Ask Me Anything நடத்தியபோது நெட்டிசன் கேட்ட ஒரு கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன்‛மூடிட்டு போடா' என்று பதிலளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருப்பவர் கமல்ஹாசன். இவரது மகள் ஸ்ருதி ஹாசன். நடிகையான இவர் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் நடித்து வருகிறார். தற்போது ஸ்ருதி ஹாசன் மும்பையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் பிற நடிகர், நடிகைகளை போல் ‛Ask Me Anything' என்ற பெயரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஸ்ருதி ஹாசனும் பதிலளித்து வருகிறார்.
இந்நிலையில் தான் நெட்டிசன் ஒருவரின் கேள்வியால் திடீரென்று ஸ்ருதி ஹாசன் டென்ஷனாகி ‛மூடிட்டு போடா' என்று பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நெட்டிசன் ஒருவர் ஸ்ருதி ஹாசனிடம், ‛‛தென்மாநில மொழியில் ஏதாவது ஒன்றை கூறுங்கள்'' என கேட்டிருந்தார். அதற்கு தான் ஸ்ருதி ஹாசன் இப்படி பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த கேள்விக்கு ஸ்ருதி ஹாசன், ‛‛ஓகே.. சிறிய வகையிலான இனவாதம் பார்வை என்பது சரியில்லை. எங்களை பார்த்து இட்லி, தோசை, சாம்பார் எனக்கூறுவது சரியில்லை. அது அழகானதாகவும் இல்லை. அதோடு எங்களை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு பின்பற்றவில்லை. இதனால் வேடிக்கை காட்டுவது போல் நடந்து கொள்ள முயற்சிக்காதீர்கள். இது தொடரும் பட்சத்தில் ‛மூடிட்டு போடா'' என்று தென்இந்திய மொழியில் கூற விரும்புவேன்'' என கூறியுள்ளார்.
ஸ்ருதி ஹாசனின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவின் பின்னணி ஒருதரப்புக்கு புரிந்துள்ள நிலையில், இன்னொரு தரப்புக்கு புரியவில்லை. அதாவது பொதுவாக இந்தி நடிகர்கள் தென்இந்திய நடிகர்களை பொது நிகழ்ச்சிகளின்போது கிண்டல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதோடு சில சமயங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் புகழ்பெற்ற காலை உணவாக உள்ள இட்லி, தோசை, சாம்பார் உள்ளிட்டவற்றை கூறி கூட கிண்டல் செய்கின்றனர்.
சமீபத்தில் கூட அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான், நடிகர் ராம்சரனை இட்லி, வடை எனும் வகையில் குறிப்பிட்டு பேசியது விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் நெட்டிசன் ஒருவர் ‛‛தென்இந்திய மொழியில் பேச கூறியதற்கு, இந்தி நடிகர்களை ‛அட்டாக்' செய்யும் வகையில் எங்களை பார்த்து இட்லி, தோசை, சாம்பார் என்று கூறினால் மூடிட்டு போடா என பதிலளிப்போம்'' என்பதை ஸ்ருதிஹாசன் வெளிக்காட்டி உள்ளார்.
மேலும் இந்த பதிவில் ஸ்ருதி ஹாசன் யாருடைய பெயரையும் குறிப்பிடப்பவில்லை. ஆனாலும் ஷாருக்கானை மறைமுகமாக ஸ்ருதி ஹாசன் ‛அட்டாக்' செய்துள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஸ்ருதி ஹாசனின் இந்த பதிவு என்பது இணையதளத்தில் கேவமாக பவரி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications