இலங்கை தொடர் குண்டுவெடிப்பு பற்றி கேலி, கிண்டல்... நடிகை ஸ்ரீப்ரியா வெளியிட்ட கண்டன பதிவு
Recommended Video
சென்னை:இலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேவலமான விமர்சனம் வைப்பவர்கள் மனித தன்மையற்றவர்கள் என்று நடிகை ஸ்ரீப்ரியா கடுமையாக பதிவிட்டிருக்கிறார்.
இலங்கையில் சர்ச் மற்றும் ஓட்டல்களில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 207 பேர் பலியாகினர். உலக அளவில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் இந்த சம்பவம் பற்றி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை ஸ்ரீப்ரியா இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இலங்கை குண்டுவெடிப்பு பேரதிர்ச்சி அளிக்கிறது...வேதனைக்குறிய செய்தி...மனிதம் எங்கே போயிற்று...
— sripriya (@sripriya) April 21, 2019
அந்த டுவிட்டர் பதிவை பலரும் கிண்டல் செய்து விமர்சித்து வருவதாக தெரிகிறது. இதனை அறிந்த ஸ்ரீப்ரியா டுவிட்டரில் மீண்டும் ஒரு பதிவிட்டுள்ளார்.
இலங்கை சம்பவத்தை பற்றி வருத்தத்தை தெரிவிக்கும் tweetற்கு சம்மந்தமில்லாத கிண்டல் மற்றும் கேவலமானcomment களை பதிவு செய்யும் மனிததன்மைக்கு எதிரானவர்களை மகிழ்ச்சியுடன் நான்block செய்வேன்...இதுப்போன்றவர்கள் .....😡😡
— sripriya (@sripriya) April 21, 2019
அதில் அவர் கூறியிருப்பதாவது:இலங்கை சம்பவத்தை பற்றி வருத்தத்தை தெரிவிக்கும் டுவீட்டுக்கு சம்மந்தமில்லாத கிண்டல் மற்றும் கேவலமான கமென்ட்டுகளை பதிவு செய்யும் மனித தன்மைக்கு எதிரானவர்களை மகிழ்ச்சியுடன் நான் பிளாக் செய்வேன்...இதுப்போன்றவர்கள்"என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications