வேதனையாக இருக்கிறது.. உதவுங்கள் பிரதமர் மோடி.. நடிகை சுதா சந்திரனின் கலங்க வைக்கும் வேண்டுகோள்!
சென்னை: பிரபல நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரன் பிரதமர் மோடிக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறார்.
Recommended Video
இந்தியாவில் மாற்று திறனாளிகளுக்கு போதிய அளவில் பொது இடங்களில் வசதிகள் செய்து தரப்படுவது இல்லை. மாற்றுதிறனாளிகள் செல்லும் அளவிற்கு பாதைகள் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இல்லை. அவர்கள் வீல் சேர் செல்லும் அளவிற்கும் வசதிகள் இல்லை.
ஏர்போர்ட் போன்ற பெரிய இடங்களில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வசதிகள் இல்லை என்ற அவலம் நம் நாட்டில் நிலவுகிறது. இந்த நிலையில்தான் நடிகை சுதா சந்திரன் விமான நிலையத்தில் தான் எதிர்கொண்ட சிரமம் ஒன்றை வீடியோவாக வெளியிட்டு பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

மோடிக்கு கோரிக்கை
பிரதமர் மோடிக்கு சுதா சந்திரன் வைத்த கோரிக்கையில், பிரதமர் மோடிக்கு வணக்கம். அரசுக்கும், உங்களுக்கும் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நான் சுதா சந்திரன், நடிகை, நடன கலைஞர். எனக்கு செயற்கை மூட்டு பொருத்தப்பட்டு உள்ளது. இந்த செயற்கை மூட்டோடு நடனம் ஆடி நான் மிகப்பெரிய சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்து கொடுத்து இருக்கிறேன்.

விமான நிலையம்
பணி நிமித்தமாக ஒவ்வொருமுறை நான் விமான நிலையம் செல்லும் போதும் நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறேன். சிஐஎஸ்எப் அதிகாரிகள் மூலம் ஒவ்வொரு முறை விமான நிலைய சோதனைக்கு உட்படும் போதும் என்னுடைய செயற்கை மூட்டையும் சேர்த்தே "ஈடிடி டிடக்டர்" சோதனை (வெடிகுண்டு சோதனை) செய்ய சொல்வேன். ஆனால் அதிகாரிகள் என்னை நம்பாமல்.. எனக்கு செயற்கை மூட்டு பொருத்தப்பட்டதை எடுத்து வெளியே காட்ட சொல்வார்கள். என்னுடைய செயற்கை மூட்டை நான் எப்படி எடுத்து வெளியே காட்ட முடியும்? இது எப்படி சாத்தியம்?

பிரச்சனை
ஒவ்வொரு முறை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை செய்யப்படும் போதெல்லாம் இந்த பிரச்சனையை நான் எதிர்கொள்கிறேன். மோடிஜி.. இதுதான் நம்முடைய நாடா? இதுதான் நம்முடைய நாட்டில் பெண்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பா? இந்தியாவில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வயதை அறிவிக்கும் வகையில் சீனியர் சிட்டிசன் என்ற அட்டையை பிரதமர் மோடி வழங்க வேண்டும்.

கலக்கம்
சீனியர் சிட்டிசன்களுக்கு என்று சிறப்பு அடையாள அட்டை ஒன்றை வழங்க வேண்டும். ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் நடக்கும் இந்த சோதனை எனக்கு வருத்தத்தை கொடுக்கிறது. வேதனையாக இருக்கிறது. என்னுடைய கோரிக்கை அரசு அதிகாரிகளுக்கு சென்றடையும் என்று நம்புகிறேன். உடனே இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன் என்று சுதா சந்திரன் உருக்கமான கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

விபத்து
பிரபல நடிகை சுதா சந்திரன் விபத்து ஒன்றில் தன்னுடைய காலை இழந்து பின் செயற்கை மூட்டு மற்றும் கால் பொருத்தி உள்ளார். இதோடு இவர் நடனம் ஆடி சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சுதா சந்திரன் உருக்கமாக வைத்த இந்த கோரிக்கை இணையத்தில் வைரலாகி உள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications