Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை சுனைனா கடத்தப்பட்டாரா? செல்போன் சுவிட்ச் ஆப்.. வீடியோ வெளியிட்ட பட தயாரிப்பு நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சுனைனா கடத்தப்பட்டதாக சினிமா பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியிட்ட தகவலை அடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை சுனைனா. இவர் 2008ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மாசிலாமமி, வம்சம், சில்லுகருப்பட்டி மற்றும் லத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Actress Sunaina was kidnapped byunknown assailants?

இவர் தற்போது அயிரா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் டொமின் டிசில்வா இயக்கத்தில் ரெஜினா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் சுனைனாவை கடந்த இரு தினங்களாக காணவில்லை என ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தகவல் பரவியுள்ளது. அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் அவர் கடத்தப்பட்டாரா என்ற கேள்விகேட்டு ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 6 நாட்களுக்கு முன்பு சென்னை வந்த நடிகை சுனைனா5 நாட்களுக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சிஎஸ்க கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை தனது தோழிகளுடன் கண்டு களித்துள்ளார். இதற்கான புகைப்படத்தையும் வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் சுனைனா வெளியிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு பிறகு சுனைனா எந்த பதிவையும் அவருடைய சமூகவலைதள பக்கத்தில போடவில்லை. இந்த நிலையில் நடிகை சுனைனா காணாமல் போனதாக வீடியோ வெளியான நிலையில் காவல் துறையினர் அவர் கடைசியாக எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர் எழும்பூர், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Actress Sunaina was kidnapped byunknown assailants?

அதன் பேரில் போலீஸார் அந்த இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். வளசரவாக்கத்தில் அவர் தங்கி படம் நடித்த வீடு மற்றும் அவரை காணவில்லை என வீடியோ பதிவிட்ட தயாரிப்பு நிறுவனத்திலும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அவரது செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் ஆனதால் அவரிடம் வேறு தொடர்பு எண்கள் இருந்தத, அவர் எங்கு தங்கியிருக்கிறார் போன்ற விவரங்களை விசாரித்து வருகிறார்கள்.

Actress Sunaina was kidnapped byunknown assailants?

நடிகை சுனைனாவை காணவில்லை என சினிமா தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டிருந்தது அவர் நடித்த ரெஜினா பட பிரமோஷனுக்காக என தெரியவந்துள்ளது. ஒரு படத்தை விளம்பரப்படுத்த தயாரிப்பு நிறுவனம் மேற்கண்ட யுத்தி என்பது தெரியவந்தது. ஆனால் உண்மையிலேயே சுனைனா காணாமல் போனது போல் ஒரு வீடியோவை உருவாக்கி சமூகவலைதளங்களில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரெஸ்கியூ சுனைனா என்ற ஹேஷ்டேக்குகளை டிரெனட்டாக்கி வந்தனர். பட குழுவினரை போலீஸார் எச்சரித்ததாக தெரிகிறது. ஒரு பட புரமோஷனுக்காக இப்படியா கிளப்பி விடுவது என ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

Actress Sunaina was kidnapped byunknown assailants?
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+