தீபாவளிக்கு சன் டிவியில் '96' திரைப்படத்தை ஒளிபரப்ப கூடாது.. திரிஷா பகிரங்க எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தீபாவளிக்கு சன் டிவியில் 96 ஒளிபரப்ப கூடாது.. திரிஷா எதிர்ப்பு-வீடியோ

    சென்னை: '96' திரைப்படம் வெளியாகி ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், வரும் தீபாவளி நாளில், சன் டிவி தொலைக்காட்சியில் இந்த திரைப்படத்தை காண்பிக்க உள்ளதற்கு, நடிகை திரிஷா பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    பிரேம்குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி, திரிஷா உள்ளிட்டோர் நடித்து ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான திரைப்படம் 96.

    இளம் வயது காதல், இதன் பிறகு, தற்காலத்தில் அந்த காதலுக்கு காட்டப்படும் கண்ணியம், பழைய நினைவுகள், என பல்வேறு அம்சங்களை சுமந்து வந்தது இந்த திரைப்படம்.

    கடும் விமர்சகர்களிடம் கூட நல்ல மதிப்பெண்களைப் பெற்றது. ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. இதயத்தை காற்றில் கரைந்து விடக் கூடிய இசை, என திரைப்படம் பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியது.

    கூடுதல் தியேட்டர்கள்

    கூடுதல் தியேட்டர்கள்

    வெளியிட்ட முதல் வாரத்தை விட அதற்கு அடுத்தடுத்த வாரங்களில், அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்ட சமீபகால திரைப்படமும் இதுதான். அந்த அளவுக்கு ரசிகர்களின் அமோக ஆதரவுடன் 50 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது 96. இந்த நிலையில்தான் தீபாவளியை முன்னிட்டு, வரும் செவ்வாய்க்கிழமை சன் தொலைக்காட்சியில், இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    திரிஷா எதிர்ப்பு

    திரிஷா எதிர்ப்பு

    இதனால், திரைப்படத்தில் பங்காற்றிய கலைஞர்கள் மட்டுமின்றி, இப்படத்தை தீவிரமாக கொண்டாடிய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில்தான், தைரியமான கருத்துகளுக்கு பெயர் பெற்ற நடிகை திரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் சன் டிவியில் 96 திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    திரிஷா காட்டம்

    96 திரைப்படம் ஐந்தாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. இப்போதும்கூட தியேட்டர்களில் 80 சதவீத இருக்கைகள் நிரம்புகின்றன. நாங்கள் இந்த திரைப்படத்தை சேர்ந்த ஒரு குழுவாக சன் டிவியில் 96 திரைப்படத்தை இவ்வளவு விரைவில் ஒளிபரப்பு செய்வது சரி இல்லை என்று நினைக்கிறோம். திரைப்படத்தை பொங்கல் நாளில் வெளியிட வேண்டும் என்று சன் தொலைக்காட்சியை கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு செய்தால் அது சிறப்பாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #Ban96MoviePremierOnSunTv என்று ஹேஸ்டேக் போட்டுள்ளார்.

    ரசிகர்களும் கோபம்

    ட்விட்டரில் அவரைப் பின்தொடரும் ரசிகர்களும் கூட இதை வலியுறுத்தி ட்வீட் வெளியிட்டுள்ளதை பார்க்க முடிகிறது. மூன்றாவது வாரத்தை விட ஐந்தாவது வாரத்தில் கோவையில் இந்த திரைப்படம் காண்பிக்கப்படும் தியேட்டர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது, என்று நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ள விளம்பரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நெட்டிசன் தெரிவித்துள்ளார். கர்நாடக தலைநகர் பெங்களூரில் கூட இன்னும் பல தியேட்டர்களில் 96 திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+