நடிகை கமலா காமேஷ் உடல்நிலை குறித்த வதந்தி! மகள் உமா ரியாஸ் மறுப்பு
சென்னை: சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடிப்பில் கலக்கிய நடிகை கமலா காமேஷ் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் என்ற செய்தி வதந்தி என்று அவருடைய மகள் உமா ரியாஸ் கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கமலா காமேஷ் உடல்நல பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக கடந்த ஒரு மணி நேரமாக தகவல்கள் வெளியான நிலையில் அது வதந்தி என உமா ரியாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து நாம் விசாரித்த போது உமா ரியாஸ் கூறுகையில் எனது அம்மா நலமுடன் இருக்கிறார்.

எனது மாமியாரும் ரியாஸ் கானின் தாயுமான ரஷீதா பானுதான் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். அவர் என்னுடன் சென்னை வீட்டில் இருந்தார். வயோதிகம் காரணமாக மறைந்தார். அவருக்கு வயது 72 என உமா ரியாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம், கன்னட மொழி திரைப்படங்களில் அம்மா கேரக்டர், குணச்சித்திர கேரக்டர்களில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் கமலா காமேஷ். இவர் சம்சாரம் அது மின்சாரம், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் கடந்த 1974 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு உமா ரியாஸ் என்ற மகள் இருக்கிறார். இவர் நடிகர் ரியாஸ் கானின் மனைவியாவார். உமா ரியாஸ்கானும் திரைப்படங்கள், சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் குக் வித் கோமாளி முதல் சீசனில் கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனார். அது முதல் யூடியூப் சேனல் மூலம் விதவிதமாக சமைத்து ரசிகர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார். மேலும் மீன் வாங்குவது எப்படி என்பது குறித்த வீடியோக்களையும் இவர் பதிவிட்டுள்ளார். அண்மையில்தான் இவரது மகன் ஷாரிக்கிற்கு மரியா என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது.
கமலா காமேஷ் அண்மையில் ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் வெளியான வீட்டுல விசேஷம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கமலா காமேஷின் பள்ளிக் காலத்து நண்பரும் இயக்குநருமான ஜெயபாரதி, தனது குடிசை படத்திற்கு ஒல்லியாக, உயரமாக குடும்பப் பாங்கான பெண்ணை தேடி வந்தார்.
அப்போதுதான் கமலா காமேஷின் நினைவு வந்து அவரை தனது படத்தில் நடிக்க வைத்தார். விதியின் விளையாட்டால்தான் நடிக்க வந்ததாக கமலா காமேஷ் அடிக்கடி கூறுவார். விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கோதாவரி என்ற கேரக்டரில் கமலா அழகாக நடித்திருந்தார். நூல் புடவையில் கொண்டை போட்டுக் கொண்டு கணவருக்கு பயந்த சுபாவம் கொண்டவராகவும் அவர் கிழித்த கோட்டை தாண்டாதவராகவும் (இந்த படத்தில் ஒரு சீனில் தாண்டியிருந்தார்) நடித்திருந்தார். மேலும் பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டவராகவும் இருந்தார்.
அப்போது அவருக்கு சிறிய வயதுதானாம். ஆனாலும் வயதான தோற்றங்களை ஏற்று நடித்தார். தொடர்ந்து வயதான தோற்ற கதாபாத்திரங்களே அவருக்கு கிடைத்தன. அவர் நடித்த கேரக்டர்கள் எல்லாமே அனைவராலும் பாராட்டப்பட்டன. அம்மா கேரக்டர் என்றாலே கமலா காமேஷை கூப்பிடுங்க என சொல்லும் அளவுக்கு அவருடைய நடிப்பு இருந்தது.
தற்போது தனது மகள், பேரன் என வசித்து வரும் கமலா காமேஷ் குறித்து மிகப் பெரிய வதந்தி பரப்பப்பட்டால் அவருடைய ரசிகர்கள் கவலையடைந்தனர். பின்னர் உமா ரியாஸ்கான், தனது தாய் நலமுடன் இருக்கிறார் என அறிவித்ததை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து அவர் தீர்க்க ஆயுளுடன் இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறார்கள்.
கமலா காமேஷை போல் நடிகர் சரத்பாபுவுக்கும் இப்படிதான் அவர் மருத்துவமனையில் இருந்த போது இறந்துவிட்டார் என வதந்தி பரவி பிறகு அவர் நலமுடன் சிகிச்சையில் இருக்கிறார் என உறவினர்கள் தெரிவித்திருந்தனர். பாடகி எஸ்.ஜானகி, மைக் மோகன் உள்ளிட்டோர் விவகாரங்களிலும் சமூகவலைதளவாசிகள் இப்படியான ஒரு வதந்தியை பரப்பியதால் பெரும் குழப்பம் நிலவியது. இது போல் வதந்தி பரப்புவோர் குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications