Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வனிதாவிடம் வறுபட்ட லட்சுமி.. டிவிட்டரே நாறி போச்சு.. யூடியூபே ஊசி போச்சு.. வாயா அது.. ஆத்தாடி!

வனிதாவின் ட்விட்டர் சண்டை வலுத்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ட்விட்டரே ரணகளமாகி கொண்டிருக்கிறது.. "மொக்க பீஸ்.. புதுசா சீன் போடுது.. நீ ஒரு வேஸ்ட் பீஸ்.. ஓடி போடீ.. உன் ஒரிஜினல் வேலைய பாரு.. நீயே ஒரு பிராடு, லீகலா கிழிப்பே நீ.. உன் லைஃப் பத்தி எனக்கு தெரியும்.. லீகலா புருஷன அவங்கக்கூட சேர்த்து வைக்கப்போறீயா.. முதல்ல உன் புருஷன உன் கூட சேர சொல்லு" என்று காது கூசும் வார்த்தைகள் கேட்டு கொண்டே இருக்கின்றன! இப்படி தமிழகத்தின் பிரபலங்கள் வனிதா, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன்!

Recommended Video

    வீட்டு சண்டை வீதிக்கு வந்தது • Lakshmi யை ஓடவிட்ட வனிதா

    வனிதா விஜயகுமாருக்கு சமீபத்தில் கல்யாணம் நடந்தது.. ஆனால், கணவர் பீட்டர் பாலின் மனைவி இது சம்பந்தமாக புகார் அளித்திருந்தார்.. முறைப்படி டைவர்ஸ் வாங்காமல் கல்யாணம் செய்து கொண்டுள்ளார் என்று கூறியிருந்ததுடன், பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    இந்த சம்பவம் ஓரிரு நாட்கள் ஓய்ந்த நிலையில், வனிதாவும், பீட்டர் பாலுடன் ஒரு வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டனர்.. அது மறுபடியும் சர்ச்சையானது.. இதையடுத்து, பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் நடிகையும், டைரக்டருமான லட்சுமி ராமகிருஷ்ணனிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

     லட்சுமி ராமகிருஷ்ணன்

    லட்சுமி ராமகிருஷ்ணன்

    ஏற்கனவே இது சம்பந்தமாக பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், மன்னிப்பு கேட்டு விலகிய நிலையில், திரும்பவும் இந்த பிரச்சனை வெடித்துள்ளது.. இந்த சமயத்தில்தான் லட்சுமி ராமகிருஷ்ணனும், வனிதாவும் சேர்ந்து ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தனர்.. அந்த பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா தகாத வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தார்... லட்சுமி ராமகிருஷ்ணனை விளாசி தள்ளிவிட்டார்.. மரியாதை இல்லாமல் வாடி, போடி என்றார். உன்னை பற்றி எனக்கு தெரியாதா, நீ ரொம்ப பத்தினி மாதிரி பேசாதே.. "நீ யாருடி.. குப்பை.. அப்படிதான்டி உன்னை பேசுவேன்.. கிழித்து தொங்க விட்டுடுவேன்" என்றும் கூறினார்.

    கஸ்தூரி

    கஸ்தூரி

    இதற்கு உடனே கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணனை பார்த்து பாவப்படுவதாக ட்வீட் செய்து, இது போன்ற குழாயடி சண்டை ஆட்களுடன் பேச்சு வைத்துக் கொள்ள வேண்டாம் என்றுதான் கூறியிருந்தார். அவ்வளவுதான்.. இப்போது வனிதா, கஸ்தூரியை திட்ட ஆரம்பித்துவிட்டார்.. "என் வாழ்க்கை ராக்கிங்... பிக் பாஸ் மொக்க பீஸ் ஆச்சு அங்கே மானம் போச்சு இங்கே வந்து புதுசா சீன் போடுது. என் வாழ்க்கையில் இனியும் தலையிட முயற்சி செய்தால் உன் வாழ்க்கையை இந்த சமூகத்திற்கு ஆதாரத்துடன் எக்ஸ்போஸ் செய்வேன்." என்றார்.

     நிதியுதவி

    நிதியுதவி

    மேலும், "கஸ்தூரி, எலிசபெத் ஹெலனுக்கு வாழ்க்கை அளித்திருக்கிறார்... உங்களுக்கு வாழ்க்கை. அதனால் நீங்கள் அவருக்கு நிதி உதவியும் செய்யலாம். அவருக்கு நீங்களும், தமிழ்நாடும் இருக்கிறது" என்று வனிதா தெரிவித்தார்.

     கஸ்தூரி ட்வீட்

    கஸ்தூரி ட்வீட்

    உடனே வனிதாவின் ட்வீட்டுக்கு கஸ்தூரி பதிலளிக்கும்போது, "நான் யாருடைய கணவரையும் திருடவில்லை. 40 வயதில் இளவயது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவில்லை... நான் எலிசபெத் ஹெலனுக்கு சட்டப்படி ஆதரவு அளிப்பேன்" என்றார். இப்படியே மாறி மாறி பதிலடி தந்து கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் வனிதா, தான் கஸ்தூரியை பிளாக் செய்து விட்டதாக தெரிவித்தார்.. இதை பார்த்த கஸ்தூரி, "இதற்கு பயந்துட்டியா குமாரு" என்று வனிதாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது... இந்த பெண்களின் சண்டைகளை தமிழகமே வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+