Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை வனிதா மீது தாக்குதல்.. “பிரதீப் ஆதரவாளர் அடிச்சுட்டான்!” முகத்தில் காயத்துடன் புகைப்படம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை வனிதா, நடிகர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் தன்னை தாக்கியதாக முகத்தில் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகர் அருண் விஜய்யின் சகோதரியுமான நடிகை வனிதா விஜயகுமார், விஜய் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த வனிதாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் பிக்பாஸ் 3 வது சீசனில் போட்டியாளராக அவர் கலந்துகொண்டார்.

Actress Vanitha said that she assaulted by a supporter of actor Pradeep Antony

அந்த சீசனில் வனிதா விஜயகுமாரின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின. இதனால் பாதிலேயே வெளியேற்றப்பட்ட அவர், மீண்டும் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றார். அப்படியும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. பிக்பாஸ் சீசன் முடிந்த பிறகும் திருமணம் உள்ளிட்ட சர்ச்சைகள் காரணமாக தொடர்ந்து லைம் லைட்டில் இருந்தார் வனிதா. பின்னர் யூடியூப் சேனல் தொடங்கி வீடியோ வெளியிடுவது, திரைப்படங்களில் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியானார்.

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் 7 வது சீசனில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கெடுத்து இருக்கிறார். அவருக்கு ஆதரவாக பிக்பாஸ் விமர்சனம் என்ற பெயரில் யூடியூப் சேனலில் பேசி வருகிறார். அதில் தனது மகளுக்கு ஆதரவாக அவர் பேசி வருகிறார். அதேபோல் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னை பிரதீப்பின் ஆதரவாளர் தாக்கிவிட்டதாக வனிதா விஜயகுமார் புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

முகத்தில் காயமடைந்து மருந்து தேய்த்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ள வனிதா இதுகுறித்து தெரிவித்து உள்ளதாவது, "பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளரால் கொடூரமாக தாக்கப்பட்டேன். யாரென்று கடவுளுக்கே தெரியும். பிக்பாஸ் 7 வது சீசன் விமர்சனத்தை முடித்து இரவு சாப்பிட்டுவிட்டு, எனது சகோதரி சவுமியா வீட்டில் நிறுத்தி இருந்த என்னுடைய காரை எடுக்க சென்றேன். அப்போது இருட்டில் ஒருவர் என் முன் தோன்றி, "ரெட் கார்ட் கொடுக்குறீங்களா? அதுக்கு நீ ஆதரவா" என்று கூறி தாக்கி சென்றுவிட்டார்.

எனது முகத்தில் ரத்தம் வழிந்தோடியது. கடுமையான வலியாக உள்ளது. முகம் வீக்கமடைந்து இருக்கிறது. நள்ளிரவு 1 மணி என்பதால் யாரும் அங்கு இல்லை. என்னுடைய சகோதரியை நான் அழைத்தேன். அவர் காவல் நிலையத்தில் புகாரளிக்க என்னை அழைத்தார். ஆனால், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டேன். முதலுதவி பெற்றுவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டேன். தாக்கியது யார் என்று தெரியவில்லை. என் காதுகளை துளைக்கும் அளவுக்கு பைத்தியம்போல் சிரித்தான்.

அனைத்தில் இருந்து ப்ரேக் எடுக்க விரும்புகிறேன். உடல் ரீதியாக திரையில் தோன்றும் வகையில் நான் இல்லை. இடையூறு செய்பவர்களை ஆதரிப்பவர்களுக்கு, ஆபத்து ஒரு அடி தூரத்தில்தான் உள்ளது. என் மீதான தாக்குதலை தைரியமாக பதிவு செய்கிறேன். பிக்பாஸ் தமிழ் சீசன் 7 என்பது தொலைக்காட்சியில் ஒரு கேம் ஷோ மட்டுமே. எனக்கு இதை கடந்து செல்வதற்கு தகுதி இல்லை." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+