"சின்ன வயசு".. அப்போ புரியல.. இப்ப எல்லாமே புரியுது.. நடிகை வனிதா சொன்ன விஷயம்.. திகைத்த திருப்பதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழில்நுட்பங்கள் அதிக அளவு திரையுலகில் பெருகியுள்ளது.. அதேபோல, பெண்களுக்கான முக்கியத்துவமும் சினிமா படங்களில் அதிகரித்துள்ளது, மகிழ்ச்சியை தந்துவருவதாக, நடிகை வனிதா விஜயகுமார் பூரித்து சொல்கிறார்.

வனிதா விஜயகுமார், தற்போது, பல தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

பிரசாதம்: அப்போது, ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தியதுடன், ஏழுமலையானை மனம் உருகி பிரார்த்தனையும் செய்தார்.. சாமி கும்பிட்ட பின் அவர் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டார்.

Actress vanitha vijayakumar sudden visit at tirupathi thirumala and praises tamil film industry

பிறகு, கோயிலுக்கு வெளியே கும்பிட்டபடியே வெளியே வந்தார்.. அவரை பார்த்ததுமே அங்கிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.. வனிதாவிடம் சென்று சிலர் பேசினார்கள்.. சிலர் அவருடன் செல்பிகளை எடுத்து மகிழ்ந்தனர்.. குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டு, தாய்மார்கள் வனிதாவுடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினார்கள்.. அந்த குழந்தைகளை வனிதா கொஞ்சி மகிழ்ந்தார்.

மல்லி பெல்லி: இதையடுத்து, கோவிலுக்கு வெளியேவே, செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, "தமிழில், ரீ-என்ட்ரி தந்துள்ளேன்.. நிறைய படங்களிலும் நடித்து முடித்துள்ளேன்.. அந்த படங்கள் எல்லாம் வரிசையாக ரிலீஸ் ஆக போகின்றன.. சமீபத்தில் நான் நடித்த படங்களில் "அநீதி" என்ற பெயரிலான படம் அடுத்து திரைக்கு வரும் என்று எதிர்பார்த்தேன்... அதே போல் தெலுங்கில் நான் நடித்திருக்கும் "மல்லி பெல்லி" என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக போகிறது..

சின்ன வயசு: நான் சினிமாவில் காலடி வைத்த போது மிகவும் சின்ன பெண்.. அப்போது எனக்கு வயது 14 வயசுதான் இருக்கும்.. அந்த14, 15 வயதில் சினிமாவை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.. ஆனால், இப்போது நான் திரை துறையை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன்... இந்த நடிப்பு தொழிலுக்கு வரும் வாய்ப்பு என்பது எல்லாருக்கும் கிடைத்துவிடாது.. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது...

Actress vanitha vijayakumar sudden visit at tirupathi thirumala and praises tamil film industry

இப்படி சினிமாவில் என்னுடைய 2வது இன்னிங்சிற்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. என்னால் இதை நம்பவும் முடியல.. என் அம்மாவின் ஆசீர்வாதம் இது.. நல்ல படமாக எனக்கு அமைவதை அதிர்ஷ்டமாகவே பார்க்கிறேன்.. சினிமா துறை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.. தொழில் நுட்பத்திலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.. அதேபோல, பெண்களுக்கான முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது.

வாய் முகூர்த்த: தமிழில் பல படங்களில் நடித்து முடித்துள்ளேன்... அதனால், அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக திருப்பதி வந்திருக்கேன்.. திருப்பதி வந்தால் திருப்பம் தரும் என்கிறீர்கள்.. உங்கள் வாய் முகூர்த்தம் அப்படியே பலிக்கட்டும்" என்று பூரித்து சொன்னார் நடிகை வனிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+