வரலட்சுமிக்கு கொரோனா.. பெட்டில் ஏறி குதித்தும்.. கேமராவை எட்டிப்பார்த்தும்.. வீடியோவில் உருக்கம்
: நடிகை வரலட்: நடிகை வரலட்சுமி சரத்குமார் தொற்று குறித்து வீடியோ பதிவிட்டுள்ளார் சுமி சரத்குமார் தொற்று குறித்து வீடியோ பதிவிட்டுள்ளார்
சென்னை: நடிகை வரலட்சுமி தன்னுடைய வீடியோ பதிவில், "கொரோனா நம்மை விட்டு இன்னும் அகலவில்லை... எல்லாரும் மாஸ்க் அணியுங்கள். உடல்நலனை பார்த்து கொள்ளுங்கள்" என்று உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.
Recommended Video
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது.. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னையில் பொதுமக்களுக்கு மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு ரூ. 500 அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது.

நடிகை வரலட்சுமி
மேலும் தமிழக அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.. எனினும், அரசியல் கட்சி தலைவர்கள் முதல், சாமான்ய மக்கள் வரை, தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.. முதல்வர் ஸ்டாலினுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, இன்றுதான் டிஸ்சார்ஜ் ஆகி வந்துள்ளார்.. சில தமிழக தலைவர்கள் தொற்று அறிகுறி காரணமாக தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்... இந்நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குட்மார்னிங்
இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சில அறிவுறுத்தல்களையும் தெரிவித்துள்ளார். அதில், "எல்லாருக்கும் குட்மார்னிங்... எனக்கு இன்று நல்ல குட் மார்னிங்காக அமையவில்லை... எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாஸ்க் அணிதல் உள்பட அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டேன்... ஆனாலும் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.. கொரோனா நம்மை விட்டு இன்னும் அகலவில்லை...

வார்னிங்
கோவிட் பாசிட்டிவ்.. எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி.. நடிகர்கள் தயவு செய்து ஒட்டுமொத்த படக்குழுவினரையும் மாஸ்க் அணிய வலியுறுத்துங்கள். ஏனென்றால் நடிகர்களாகிய நாம் மாஸ்க் அணிய முடியாது.எல்லோரும் மாஸ்க் அணியுங்கள் என்று அவர் ஷேர் செய்துள்ள வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில்தான் இவரது இரவின் நிழல் படத்தை பார்த்துவிட்டு, பலரும் வரலட்சுமியின் நடிப்பை பாராட்டி வரும்நிலையில், திடீரென அவர் தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது,அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது..

இரவின் நிழல்
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் "வரு, சீக்கிரமாக நலம்பெற்று திரும்ப வேண்டும்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்... வரலட்சுமி தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.. இந்நிலையில், இன்னொரு வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.. அதில், நான் கொரோனா பிரச்சினையை டீல் செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளதுடன், பெட்ரூமில், செல்ல பிராணியை கொஞ்சியபடி இருக்கிறார்.. அந்த ரூமில் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் படுக்கையில் ஏறி குதித்து, பிறகு ஓடிவந்து கேமராவை எட்டிப்பார்த்தபடியும் உள்ளார்..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications