மண்டைல மாஸ்க்.. தொண்டைல மாஸ்க்.. என்னங்கடா இது.. வரு வெளியிட்ட "கலாய்" விழிப்புணர்வு வீடியோ!
சென்னை: மாஸ்க்கை எப்படியெல்லாம் அணியக் கூடாது என்பதற்கு சில நடிகர், நடிகைகளை வைத்து விழிப்புணர்வு வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளார் நடிகை வரலட்சுமி.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். மேலும் சில அமைப்புகளை வைத்து நடத்தி வருகிறார்.
சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். எந்த அரசாக இருந்தாலும் நல்லது செய்தால் பாராட்டியும் மக்கள் விரோத திட்டம் என்றால் கண்டனமும் தெரிவிப்பார்.

கொரோனா போர்
அந்த வகையில் தற்போது இவர் கொரோனாவுக்கு எதிரான போரிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகர்கள் யோகி பாபு, சந்தீப் கிஷான், கிருஷ்ணா, சதீஷ், நடிகைகள் ரெஜினா, வித்யலேகா ராமன், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியதர்ஷினி ஆகியோரை வைத்து மாஸ்கை எப்படியெல்லாம் அணியக் கூடாது என்பதற்காக விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

யார் இந்த நடிகர்கள்
அதில் தாடி மாஸ்க்கை அணிந்து கிருஷ்ணாவும் மாஸ்கை ஏற்றி இறக்கி போட்டு சதீஷும் கிருமிகள் எளிதில் நுழையும் அளவுக்கு பெரிய மாஸ்க்கை வித்யுலேகாவும் சிறிய மாஸ்கை சந்தீப் கிஷானும் அணிந்திருந்தனர். அது போல் மூக்கில் அணிவதற்கு பதிலாக கண்களில் பிரியதர்ஷினியும் காதுகளுக்கு ஜிமிக்கி போல ரெஜினாவும் அணிந்திருந்தனர்.

யோகி பாபு
ஏதோ தலைக்கு போடும் பேண்ட் போல் யோகி பாபுவும் மாஸ்கே போடாமல் அதை வைத்துக் கொண்டு விசிறி கொண்டிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் வரலட்சுமியும நடித்திருந்தார். அவர் மூக்கை திறந்துவிட்டு வாயை மட்டும் மூடியிருந்தார். மேற்கண்ட நடிகர், நடிகைகளை வரலட்சுமியே அழைத்து இது போல் வீடியோ செய்யும் ஐடியாவை கொடுத்துள்ளார்.

வீடியோ
இந்த வீடியோவில் மாஸ்க்கை எப்படியெல்லாம் அணியக் கூடாது, எப்படியெல்லாம் அணிய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். நிறைய பேர் மாஸ்க்கை தாடி மாஸ்க்காகவும் வாயை மட்டும் மூடும் மாஸ்க்காகவும் அணிகிறார்கள். அவர்களுக்கெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் இது இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications