Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாட்டிக்கிட்டாங்களே".. ஒரே கல்லில் 2 மாங்காய்.. சீமான் + எடப்பாடிக்கு.. ஒன்றாக செக் வைத்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒரே நேரத்தில் சிக்கலில் மாட்டி உள்ளனர். இரண்டு முக்கியமான வழக்குகள் இவர்களுக்கு எதிராக விரைவில் துரிதம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த இரண்டு வழக்குகள் என்னென்ன? அந்த வழக்குகளில் அடுத்து என்ன நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.

Actress Vijayalakshmi and Kodanadu case: How Edappadi Palanisamy and Seeman targetted by CM Stalin

நடிகை விஜயலட்சுமி - சீமான் விவகாரம் தமிழ்நாடு அரசியலை மீண்டும் பூதகரமாக்கி உள்ளது. சீமான் என்னை ஏமாற்றிவிட்டார்.. சீமான் என்னை திருமணம் செய்வதாக கூறினார்.. என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்றெல்லாம் விஜயலட்சுமி கூறி வருகிறார்.

எதிர் பக்கம் சீமானோ.. இது பொய்யான புகார். அரசியல் ரீதியாக தனக்கு எதிராக வைக்கப்படும் புகார் என்று கூறுகிறார். முக்கியமாக விஜயலட்சுமி சீமானிடம் பணம் பறிக்க பார்க்கிறார். அவரிடம் பணம் கேட்க வேண்டும் என்று இப்படி மிரட்டுகிறார் என்று நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

விஜயலட்சுமி வைக்கும் புகார்கள்: விஜயலட்சுமி வைக்கும் புகார்கள் பின்வருமாறு.. நீண்ட காலமாக சீமான் என்னை காதலிப்பதாக கூறினார். நாங்கள் நெருக்கமாக இருந்தோம். ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அதன்பின் அரசியல் ரீதியாக தேவைக்காக பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

என்னை ஏமாற்றிவிட்டார். அவர் என்னை பாலியல் ரீதியாக தேவைகளுக்கு பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டார். அவர் என்னை திருமணம் செய்வதாக கூறினார். இப்போது ஏமாற்றியதும் இல்லாமல் என்னை மிரட்டி வருகிறார்.

Actress Vijayalakshmi and Kodanadu case: How Edappadi Palanisamy and Seeman targetted by CM Stalin

முக்கியமாக அரசியல் ரீதியாக நான் தமிழ்நாடு வரக்கூடாது என்று மிரட்டி வருகிறார். நான் தமிழ்நாடு வந்தால் நாம் தமிழர் கட்சியினர் என்னை தாக்குவார்கள் என்று சீமான் மிரட்டுவதாக விஜயலட்சுமி கூறி வருகிறார். இதற்கான வீடியோ ஆதாரங்களையும் அவர் வெளியிட்டு உள்ளார்.

சீமான் தரப்பு: இன்னொரு பக்கம் நாம் தமிழர் தரப்போ, விஜயலட்சுமி மாற்றி மாற்றி பேசி வருகிறார். அவர் பொய் சொல்கிறார். விஜயலட்சுமி பணம்தன் பறிக்க முயன்ற ஆடியோக்கள் உள்ளன. அவை இணையத்திலேயே இருக்கின்றன என்று நாம் தமிழர் தரப்பினர் புகார் வைக்கின்றனர்.

வாக்குமூலம் - புகார்: அதன்பின் சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நாம் தமிழர் சீமானுக்கு எதிராக புகார் கொடுத்தார். அதில் இயக்குனர் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேரடியாக பாலியல் புகார்களை வைத்துள்ளார். முதலில் சீமான் தன்னை காதலித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

ஆனால் அதன்பின் என்னை ஏமாற்றிவிட்டார். என்னை பாலியல் ரீதியாக அவர் பயன்படுத்திக்கொண்டார் . திருமணம் செய்வதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். ஆனால் கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று விஜயலட்சுமி கூறினார்.

இது தொடர்பாக விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையின் போது நடிகை விஜயலட்சுமி நடந்து கொண்ட விதம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. விஜயலட்சுமி மிகவும் எமோஷனலாக காணப்பட்டு உள்ளார். அடிக்கடி விசாரணையில் அழுதுள்ளார்.சீமானை கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

Actress Vijayalakshmi and Kodanadu case: How Edappadi Palanisamy and Seeman targetted by CM Stalin

இந்த விசாரணையின் போது காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மறுத்ததாக கூறப்படுகிறது. சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியேற மறுப்பதாக கூறப்படுகிறது.விசாரணையில் சில முக்கிய வீடியோக்களை விஜயலட்சுமி கொடுத்துள்ளார்.

முக்கிய போன் ரெக்கார்டுகள், மெசேஜ்கள், பணம் கொடுத்த வங்கி விவரங்களையும் விஜயலட்சுமி போலீசில் பகிர்ந்து உள்ளார். இதையடுத்து சீமான் மீதான புகாரில் நடிகை விஜயலட்சுமியை மாஜிஸ்திரேட் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். தற்போது அவருக்கு மாஜிஸ்திரேட் முன்னிலையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு 8 முறை கரு உண்டாகி அதை கலைத்ததாக, சீமான் தனக்கு தொந்தரவு, தொல்லை, கொடுமை கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

இதை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது. இந்த நிலையில்தான் போலீஸ் இதில் முறையாக அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஸ்டெப்புகள் சீமான் மீதான வழக்கை வலுவாக்க பார்க்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் விரைவில் அவர் மீது எப்ஐஆர் பதிய வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. இதனால் எங்கே சீமான் அடுத்து கைதாகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி வழக்கு: இன்னொரு பக்கம் கோடநாடு வழக்கில் திமுக அரசின் வேகம்தான் இந்த அறிக்கை என்கிறார்கள். வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தும் திட்டத்தில் அரசு இருப்பதாக கூறப்படுகிறது.

என்ன வழக்கு இது: ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் கோடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். அதன்பின் கொள்ளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த கோடநாடு மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை பற்றி தமிழ்நாடு போலீஸ் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது.

இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்திற்கு பின் சரியாக 4 நாட்கள் கழித்து கொள்ளையில் ஈடுப்பட்ட கனகராஜ் விபத்து ஒன்றில் மர்மமாக மரணம் அடைந்தார். இவர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர். அதேபோல் இன்னொரு முக்கிய குற்றவாளி சயான் குடும்பத்தினர் விபத்தில் கொல்லப்பட்டனர். இதில் சயான் நூலிழையில் உயிர் தப்பினார்.

எடப்பாடி மீது நேரடி குற்றச்சாட்டு: இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இப்படி வழக்கில் போகஸ் எடப்பாடி பக்கம் திரும்பி உள்ளது. இந்த நிலையில்தான் வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புகார் மேல் புகார்: கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் அளித்த பரபரப்பு பேட்டிதான் இப்போது எழுந்துள்ள பரபரப்பிற்கு காரணம் என்கிறார்கள் அதிமுகவில் விவரம் அறிந்தவர்கள், எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை.. எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.,

கோடநாடு பங்களாவில் இருந்து எனது தம்பி கனகராஜ் 5 பெரிய பைகளை எடுத்து வந்தார்; அதன் உள்ளே ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன; எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில் எடுத்து வந்ததாக என்னிடம் தெரிவித்தார். கனகராஜ் உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது வழக்கில் பெரிய திருப்பத்தை அவருக்கு எதிராக ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

நெருங்கிய சிபிசிஐடி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது புகார்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் நிலையில்தான் இது தொடர்பாக சிபிசிஐடி முக்கியமான போன் ரெக்கார்டுகளை கேட்டுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி கொள்ளை நடந்த நாளில் மேற்கொள்ளப்பட்ட போன், அதில் சயான் உள்ளிட்டோர் மேற்கொண்ட ரெக்கார்டிங் ஆகியவற்றை சிபிசிஐடி கைப்பற்றி உள்ளதாம். இதன் மூலம் முக்கியமான பல ஆவணங்களை, தகவல்களை சிபிசிஐடி கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

Actress Vijayalakshmi and Kodanadu case: How Edappadi Palanisamy and Seeman targetted by CM Stalin

என்ன நடக்கிறது?: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் முக்கியமான கட்டத்தை சிபிசிஐடி எட்டி உள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே , கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் ஆத்தூரில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆத்தூர் பகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புறவழிச்சாலைகளை இணைக்கும் இடத்தில் எத்தனை வேகத்தடைகள் உள்ளன. அது எப்போது அமைக்கப்பட்டது என்ற விவரத்தை எடுத்துள்ளனர்.

கனகராஜ் விபத்தில் சிக்கிய 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி விபத்து நடந்த சிறிது நேரத்தில் வேகத்தடையில் பைக்கில் வந்த ஒருவர் விழுந்து காயம் அடைந்ததாக ஒரு தகவல் பதிவாகியிருக்கிறது. அவர் யார் என்பது குறித்து விசாரிப்பதற்காக நகராட்சி அலுவலகத்தில் வேகத்தடைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் யார் யார் இந்த நகராட்சி பகுதியில் அதிகாரிகளாக பணியாற்றி இருக்கிறார்கள்.. வேகத்தடை எப்போது அமைக்கப்பட்டது.. எந்தெந்த பகுதியில் இருக்கிறது... தற்போது எந்த இடத்தில் இருக்கிறது.. என்ற விவரங்கள் குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.

அது மட்டும் இன்றி நகராட்சி அலுவலகத்தில் பல்வேறு தகவல்களை பெற்று ஆவணங்களையும் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. கோடநாடு கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சிபிசிஐடி மேற்கொண்ட இந்த விசாரணை முக்கியம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+