சீமானுக்கு கட்டிய மனைவியின் தாய்மொழியே தெரியாது! இதுல என்னோடது எங்க? நான் தமிழச்சிதான்! விஜயலட்சுமி
சென்னை: நான் தமிழச்சிதான் என நடிகை விஜயலட்சுமி தான் படித்த பள்ளிக் கூட சான்றிதழை காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். தனது தாய், தகப்பன் பெயர், ஜாதி பெயர் என அதில் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னுடன் குடும்பம் நடத்தி வாழ்க்கையை சீரழித்துவிட்டதாக நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இந்த புகார் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திடீரென வழக்கை பெற்றுக் கொண்டு விஜயலட்சுமி, பெங்களூருக்கே சென்றுவிட்டார். ஆனாலும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து சீமானை விமர்சித்து வருகிறார்.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது முதல் விஜய்யை, சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய்யின் கொள்கையையும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் தமிழ் தேசியம் குறித்து சீமான் தனது கருத்துகளை முன் வைத்திருந்தார். மேலும் விஜயலட்சுமி தமிழர் இல்லை என்றும் அவர் கன்னடர் என்றும் நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்து வந்தனர்.
இதற்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி கூறுகையில் வந்தாச்சு மீண்டும் மிஸ்டர் சீமான்.. ரொம்ப உத்தமர் மாதிரி தமிழ் தேசியம் பற்றி கதைகளைப் பேசிவிட்டு, நான் நல்ல தமிழ் அப்பா அம்மாவுக்கு பிறந்தவன் என்று கூறி இருக்கிறார் சீமான். அப்போ நான் என்ன இந்தி அப்பா அம்மாவுக்கு பிறந்தவளா? நானும் தமிழ் அப்பா அம்மாவுக்கு பிறந்தவள் தான். ஒண்ணும் இல்ல மிஸ்டர் சீமான்.. அடுத்து "என்னை (சீமான்) முதலமைச்சர் ஆக்குங்க என்று சொன்னீங்களே".. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு விஷயத்தில் கிளாரிட்டி கொடுங்க..
அதன்பிறகு உங்களை முதலமைச்சர் ஆக்கலாமா வேண்டாமா என்று அவர்கள் முடிவு செய்வார்கள். போன வருடம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை என் வங்கிக் கணக்கில் ரூ. 50,000 போட்டுவிட்டு, இது கயல்விழிக்கு தெரியக்கூடாது, நாம் தமிழர் கட்சியினருக்கு தெரியக்கூடாது, மீடியாவுக்கு தெரியக்கூடாது என என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டு, இரவும் பகலுமாக என்னிடம் வீடியோ வாங்க டார்ச்சர் செய்தீர்களே.. அதையெல்லாம் தாங்க முடியாமல் தானே நான் வழக்கு கொடுத்தேன்.
அதையெல்லாம் மறைத்துவிட்டு, என் பெயரைக் கெடுக்க திமுக விஜயலட்சுமியை கூட்டி வந்திருக்கிறது என பச்சைப் பொய் சொன்னீர்களே.. அவ்வளவுதானா உங்க யோக்கியதை? வெறும் 5000 ரூபாய்க்கு உங்களிடம் வீட்டு வேலைக்கு வந்த மதுரை செல்வம் எனக்கு ரூ. 1 கோடி கொடுத்திருக்கிறாராம். அதை என்னவென்று கேட்காமல் சிரிப்பது தானா உங்கள் யோக்கியதை?
இதையெல்லாம் பார்த்த பிறகு தமிழ்நாட்டு மக்கள் உங்களை முதலமைச்சர் ஆக்கப்போகிறார்களா? உங்களுக்கு உண்மை பேசும் யோக்கியதையே கிடையாது. உங்களைப் போன்ற துரோகிகள் கையில் தமிழ்நாடு எப்போதும் சிக்காது. எனவே, உங்கள் முதலமைச்சர் கனவை இத்தோடு விட்டுவிடுங்கள். என் கண்ணீர் உங்களை சும்மா விடாது" என ஆவேசமாகப் பேசியிருந்தார்.
இந்த நிலையில் தன்னை மீண்டி கன்னடர் என்றே நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்து வந்ததை அடுத்து விஜயலட்சுமி மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு தாய்மொழி வந்து தமிழே கிடையாதுன்னு சீமானும் நாம் தமிழர் கட்சியும் நிறைய இடத்தில் தவறாக சொல்லியிருப்பாங்க. இன்றைக்கு அந்த விஷயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்னு நினைச்சேன்.
பெங்களூருவில் நான் படிச்ச க்ளூனி கான்வென்ட் ஹைஸ்கூலில் வாங்கிய சர்டிஃபிகேட்டை தமிழ் ஊடகங்களுக்கு நான் ஷேர் பண்ணியிருக்கேன். அதில் ரொம்பத் தெளிவாகப் போட்டுருக்காங்க. விஜயலட்சுமி, தகப்பனார் பெயர் சுந்தரம், மதம் - இந்து, தாய்மொழி - தமிழ் அப்படின்னு தெளிவாக இந்த சர்டிபிகேட்டில் போட்டுருக்காங்க. இன்றைக்குப் போடல, 1986ஆம் ஆண்டிலேயே போட்டிருக்காங்க.
அந்த சர்டிஃபிகேட்டுடைய காப்பி, மீடியா எல்லாத்துக்கும் கொடுத்திருக்கேன். மீடியா இந்த ஆதாரங்களை வெளியிடுங்கள். சீமானுக்குக் கூட வாழ்ந்த பொண்டாட்டியுடைய சாதி, மொழியே என்னான்னு தெரியாது. அதனால், அவரும் குழப்பிக்கிட்டு மக்களையும் குழப்பிட்டு இருப்பார் இல்லையா. அதனால், இந்த வீடியோவை வெளியிட்டு நான் என்னைப் பற்றிய விஷயங்களை தெளிவுபடுத்துகிறேன்.
அதனால், சீமானும் நான் தமிழ்ப்பொண்ணு தான் தெரிஞ்சுகிறட்டும். தமிழ்நாட்டு மக்களும் விஜயலட்சுமி தமிழ்ப்பொண்ணு தான் தெரிஞ்சுக்கட்டும். ஓ.கே.யா. வணக்கம்'' என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications