Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“மிஸ்டர் சீமான்.. தமிழ்நாடு உங்க கையில் எப்போதும் சிக்காது.. என் கண்ணீர் விடாது!” விஜயலட்சுமி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் வீடியோ வெளியிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் நடிகை விஜயலட்சுமி. "உங்களைப் போன்ற துரோகிகள் கையில் தமிழ்நாடு எப்போதும் சிக்காது. எனவே, உங்கள் முதலமைச்சர் கனவை இத்தோடு விட்டுவிடுங்கள்" எனக் கூறியுள்ளார் விஜயலட்சுமி.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி சீரழித்ததாக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். இந்த புகார் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திடீரென வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு பெங்களூருக்கே சென்றுவிட்டார் விஜயலட்சுமி. எனினும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சீமானை கடுமையாக விமர்சித்து விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

Actress Vijayalakshmi Criticizes NTK Chief Seeman in New Video Tamil Nadu Will Never Fall Into Your Hands

அந்தவகையில் லேட்டஸ்ட்டாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. சீமான் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய விஷயங்களைக் குறிப்பிட்டு அதற்கு பதிலடியாக வீடியோ வெளியிட்டுள்ளா நடிகை விஜயலட்சுமி. விஜயலட்சுமி அந்த வீடியோவில் பேசுகையில், "வந்தாச்சு மீண்டும் மிஸ்டர் சீமான்.. ரொம்ப உத்தமர் மாதிரி தமிழ் தேசியம் பற்றி கதைகளைப் பேசிவிட்டு, நான் நல்ல தமிழ் அப்பா அம்மாவுக்கு பிறந்தவன் என்று கூறி இருக்கிறார் சீமான். அப்போ நான் என்ன இந்தி அப்பா அம்மாவுக்கு பிறந்தவளா? நானும் தமிழ் அப்பா அம்மாவுக்கு பிறந்தவள தான்.

ஒண்ணும் இல்ல மிஸ்டர் சீமான்.. அடுத்து என்னை முதலமைச்சர் ஆக்குங்க என்று சொன்னீங்களே.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு விஷயத்தில் கிளாரிட்டி கொடுங்க.. அதன்பிறகு உங்களை முதலமைச்சர் ஆக்கலாமா வேண்டாமா என்று அவர்கள் முடிவு செய்வார்கள். போன வருடம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை என் வங்கிக் கணக்கில் ரூ. 50,000 போட்டுவிட்டு, இது கயல்விழிக்கு தெரியக்கூடாது, நாம் தமிழர் கட்சியினருக்கு தெரியக்கூடாது, மீடியாவுக்கு தெரியக்கூடாது என என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டு, இரவும் பகலுமாக என்னிடம் வீடியோ வாங்க டார்ச்சர் செய்தீர்களே.. அதையெல்லாம் தாங்க முடியாமல் தானே நான் வழக்கு கொடுத்தேன்.

அதையெல்லாம் மறைத்துவிட்டு, என் பெயரைக் கெடுக்க திமுக விஜயலட்சுமியை கூட்டி வந்திருக்கிறது என பச்சைப் பொய் சொன்னீர்களே.. அவ்வளவுதானா உங்க யோக்கியதை? வெறும் 5000 ரூபாய்க்கு உங்களிடம் வீட்டு வேலைக்கு வந்த மதுரை செல்வம் எனக்கு ரூ. 1 கோடி கொடுத்திருக்கிறாராம். அதை என்னவென்று கேட்காமல் சிரிப்பது தானா உங்கள் யோக்கியதை?

இதையெல்லாம் பார்த்த பிறகு தமிழ்நாட்டு மக்கள் உங்களை முதலமைச்சர் ஆக்கப்போகிறார்களா? உங்களுக்கு உண்மை பேசும் யோக்கியதையே கிடையாது. உங்களைப் போன்ற துரோகிகள் கையில் தமிழ்நாடு எப்போதும் சிக்காது. எனவே, உங்கள் முதலமைச்சர் கனவை இத்தோடு விட்டுவிடுங்கள். என் கண்ணீர் உங்களை சும்மா விடாது" என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+