Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமான் மாமா! நான் உங்க கள்ளக்காதலி இல்ல! நீங்க இல்லாம என்னால வாழ முடியாது! நடிகை விஜயலட்சுமி வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை விஜயலட்சுமி மீண்டும் புதிய வீடியோவை வெளியிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் சில திரைப்படங்களில் நடித்தும் இயக்கியும் உள்ளார். இவ்வாறு கடந்த 2011 ஆம் ஆண்டு சீமான் இயக்கிய வாழ்த்துகள் என்ற படத்தில் நடிகை விஜயலட்சுமி நடித்திருந்தார்.

Actress Vijayalakshmi releases new video by calling Seeman mama

அப்போது தங்களுக்கு காதல் ஏற்பட்டதாகவும் மாலை மாற்றி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் விஜயலட்சுமி தொடர்ந்து புகார் கூறி வந்தார். மேலும் தனக்கு திருமண ஆசை காட்டி தன்னுடன் குடித்தனம் நடத்தியதாகவும் அவர் கூறி வந்தார்.

7 முறை கர்ப்பமானாரா விஜயலட்சுமி: மேலும் சீமானால் தான் 7 முறை கர்ப்பமாகியும் தனது அனுமதியின்றி மாத்திரைகளை கொடுத்து சீமான் கருச்சிதைவு செய்துவிட்டார் என்றும் விஜயலட்சுமி தொடர்ந்து புகார் கூறி வந்தார். இவ்வாறு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக திடீரென வீடியோ வெளியிடும் விஜயலட்சுமி கடந்த ஆண்டு சீமான் கட்சியை சேர்ந்த மதுரை செல்வம் தன்னை மிரட்டுகிறார் என புகார் தெரிவித்திருந்தார்.

விஜயலட்சுமி வாக்குமூலம்: இதையடுத்து திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து சீமான் ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து 14ஆம் தேதி ஆஜராகுமாறு 2ஆவது முறையாக சம்மன் வழங்கப்பட்டது.

புகாரை வாபஸ் பெற்ற விஜயலட்சுமி: இதனிடையே சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுத்த புகாரை திடீரென வாபஸ் வாங்கினார் நடிகை விஜயலட்சுமி. இதையடுத்து செய்தியாளர்களுக்கு விஜயலட்சுமி பேட்டி அளிக்கையில் வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னால் தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என நடிகை விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.

பெங்களூர் சென்ற விஜயலட்சுமி: இதையடுத்து விஜயலட்சுமி தனது சகோதரியை அழைத்துக் கொண்டு பெங்களூருவுக்கே சென்றுவிட்டதாக சொல்லப்பட்டது. சில மாதங்களாக சீமான்- விஜயலட்சுமி பிரச்சினை ஓய்ந்திருந்தது. பின்னர் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டிய விஜயலட்சுமி மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார்.

சீமான் மாமா: மேலும் தான் இறந்தால் சீமானை சும்மா விடவே கூடாது என்றும் கூறியிருந்த அவர் சீமான் மீது புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் நேற்றைய தினம் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பெங்களூரில் உள்ள உயரமான கட்டடத்தின் உச்சியில் நிற்கிறேன். மீடியாக்கள் எல்லாம் இந்த வீடியோவை என் கணவரான சீமான் பார்க்கும் வரை ஒளிபரப்புங்கள் என கேட்கிறேன்.

சீமான்தான் என் கணவர்: சீமான் மாமா பெங்களூரில் நான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் உங்ககிட்ட சண்டை போட்டாலும் உங்கள் மேல் எனக்கு அன்பு இருக்கு என்பது உங்களுக்கே தெரியும். 14 ஆண்டுகளாக நீங்கள்தான் கணவர் என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உங்க கிட்டேயும் நான் இதை சொல்லியிருக்கிறேன். என் உயிர் மூச்சு உள்ள வரை நீங்கள்தான் என் கணவர் என்று! எனக்கு எதற்கு இந்த தண்டனை?

நான் கள்ளக்காதலி இல்லை: என்னால் உங்களை பிரிந்து வாழ முடியவில்லை. தயவு செய்து என்கிட்ட பேசுங்க. இந்த கோர்ட், கேஸ், சண்டை சச்சரவு எல்லாம் தேவையே இல்லை, நான் ஒன்றும் உங்களோட கள்ளக்காதலி கிடையாது. நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லை. பின்னாடி வந்தவங்களுக்கே இவ்ளோ பொசசிவ்னஸ் இருக்கும்போது 2008-ஆம் ஆண்டு முதல் நீங்கள்தான் என் உயிர் என வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு எவ்வளோ பொசசிவ்னஸ் இருக்கும். இது தப்பு கிடையாது.

போன வருஷம் நல்லாதானே பேசினீங்க: நான் இங்க இருந்து குதித்தால், தமிழக மக்கள் உங்களை சும்மா விடுவார்களா, அப்புறம் உங்கள் நிலைமை என்னவாகும், யாரை தண்டிக்க இப்படி பண்றீங்க மாமா, நீங்கள் இப்படியெல்லாம் செய்தால் நான் வேற ஒருத்தரை கல்யாணம் செய்துப்பேனு நினைக்கிறீங்களா, கண்டிப்பா செய்துக்க மாட்டேன். போன வருஷம் என்கிட்ட சமாதானமா பேசுனீங்க, ஆனால் மதுரை செல்வம் செய்த தவறுக்கு நான் தண்டனை அனுபவிக்கணுமா,

சீமானுக்கு தலைவலி: தமிழ்நாடு மீடியாக்களே என் கணவர் சீமானை என்னோடு சேர்த்து வச்சிடுங்கள் எனக்கு என் கணவர் வேண்டும் என உருக்கமாக தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் விஜயலட்சுமி விஸ்வரூபம் எடுத்துவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+