சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் 'செம்ம ஸ்கெட்ச்'.. கறிசோறு போட்டு குட்டையை குழப்பினாரா வீரலட்சுமி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சென்னையில் பல்வேறு போராட்ட திட்டங்களுடன் தாம் வந்ததாகவும் அதனை தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி குழப்பிவிட்டதாக 'வழக்கம் போல' வீடியோவில் குற்றம் சாட்டி உள்ளார் நடிகை விஜயலட்சுமி.

நடிகை விஜயலட்சுமியின் புதிய வீடியோவில் கூறியிருப்பதாவது: சீமான் மீதான புகாரை நான் வாபஸ் வாங்கினது என்பது ஏதோ முட்டாள்தனமாக எடுத்த முடிவோ அல்லது பெரிய தொகை கொடுக்கிறேன் என்று சொன்னதால எடுத்த முடிவோ அல்லது சீமான் ஏதோ என்னை மிரட்டியதால் எடுத்த முடிவோ என யாரும் எளிதாக கருதிட வேண்டாம்.

Actress Vijayalakshmi reveals on planned Protests against Naam Tamilar chief Seeman

நாம் தமிழர் கட்சி: இந்த வழக்கைப் பொறுத்தவரை தன்னுடைய தலைவருக்கு ஒரு பிரச்சனை எனில் சரியோ தவறோ, களத்தில் இறங்கி போராடி உயிர் கொடுத்து சீமானை காப்பத்துவோம் அப்படின்னு வெறித்தனமாக நாம் தமிழர் போராடுனதை பார்த்தேன்.

வீரலட்சுமி : இந்த பக்கம், நான் சென்னைக்கு வந்த முதல் நாளில் இருந்து சாப்பிட்டுகிட்டு தூங்கிகிட்டு இருக்கலை. எல்லாவற்றையும் அப்சர்வ் செய்தேன். யார் என்ன நினைக்கிறார்கள்? யார் என்ன தேவைக்காக பேசுகிறார்கள் என எல்லாத்தையும் பக்காவாக கூர்ந்து கவனித்து வந்தேன்.
வீரலட்சுமியைப் பொறுத்தவரை வெறும் வாய்ப் பேச்சுதான்.. என் தம்பிகளை கூட்டிகிட்டு வந்து அப்படி பண்ணிடுவேன்.. இப்படி பண்ணிடுவேன் வெறும் ஸ்டேட்மெண்ட்தான்..

உண்ணாவிரதப் போராட்டம்: வீரலட்சுமி அம்மா, உண்ணாவிரதத்தை ஸ்டார்ட் பண்ணலாம்னு சொன்னா, வேண்டாம் அக்கா... வேண்டாம் அக்கா.. பெரிய அளவு போஸ்டர் எல்லாம் ஒட்டி பெரிய விளம்பரம் எல்லாம் பண்ணிதான் செய்யனும் என்றார். நானும் இரண்டு நாள் பொறுத்து பார்த்தேன். அப்புறமாக, உண்ணாவிரதம் இருக்கலாம் வாங்க.. நீங்க வேணும்னா சாப்பிடுங்க.. நான் சாப்பிடாம உண்ணாவிரதம் இருக்கேன் என்று சொன்னேன்.

அசைவ சாப்பாடு: ஆனால் இல்லக்கா... இன்னும் 4 நாட்கள் அசைவம் சாப்பாடு கொடுக்கிறேன்... சாப்பிட்டுட்டு அப்புறம் பண்ணுங்கக்கா என்றார் வீரலட்சுமி. இப்படி அவங்களும் எதனையும் உருப்படியா பண்ணலை.. என்னையும் எதனையும் உருப்படியா செய்யவிடலை.

பணம் பறிப்பு முயற்சி: என்னை வெச்சு மறைமுகமாக மிரட்டிகிட்டு, சீமான் கிட்ட இருந்து பணம் பறிக்கிற ஒரு முயற்சியில்தான் வீரலட்சுமி இருந்தாங்க. எப்ப பார்த்தாலும் வீரலட்சுமி, உனக்கு நியாயம் வாங்கி தருவேன்னு சொல்லவில்லை. ஆனால் பெரிய அளவுக்கு செட்டில்மென்ட் பண்ணி காட்டுறேன் பாருங்க என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார் வீரலட்சுமி.

சீமானின் அன்பு: இதைப் பார்த்தப்ப, சீமான் என்கிட்ட சண்டை போட்டாலும் என்கூட வாழாமல் போனாலும் சீமானுக்குதான் என் உயிர் மேல கவலை அதிகம். நாம் தமிழர் கட்சிக்காரர்களால் ஏதும் ஆகிடக் கூடாதுங்கிற பயம் அதிகமாக இருந்துச்சு. சீமானுடைய அன்பும் நாம் தமிழர் கட்சிக்காரர்கள் அன்பும் எப்போதும் கடைசிவரை இருக்கனும்னு நினைச்சுட்டு வாபஸ் வாங்கிட்டு வந்துவிட்டேன். இதுதான் உண்மை. இது தெரியாமல் கொச்சைப்படுத்தாதீர்கள். இவ்வாறு விஜயலட்சுமி கூறியுள்ளார்.

செம்ம ஸ்கெட்ச் போல!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+