நடிகை விஜயலட்சுமி திடீர் தற்கொலை முயற்சி.. விரைந்து சென்று மீட்ட போலீஸ்.. மருத்துவமனையில் அனுமதி
நடிகை விஜயலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது
சென்னை: "இது என் கடைசி வீடியோ.. ரொம்ப மல்லுக்கட்டி என் குடும்பத்துக்காக வாழணும்னு நினைச்சேன்.. ஆனா, என்னை அசிங்கப்படுத்திட்டாங்க" என்று அழுது கொண்டே பேசிய நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கும் முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
Recommended Video
நடிகை விஜயலட்சுமி, சென்னை திருவான்மியூரில் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி வீடியோ போட்டு வந்தார். ஒரு அரசியல் கட்சித் தலைவர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் கூறியும் வந்தார். இடையில் இவருக்கு நடிகர் ரஜினிகாந்த் கூட பொருளாதார ரீதியாக உதவிகள் செய்ததாக செய்திகள் வெளியாகின. அதற்கு நன்றி தெரிவித்தும் விஜயலட்சுமி வீடியோ போட்டார்.

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி, தன்னுடைய வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்... உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மாத்திரைகளை நிறைய எடுத்து சாப்பிட்டுவிட்டார்.. இதையடுத்து அவரை சென்னை அடையாறில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் குடும்பத்தினர் உடனடியாக அனுமதித்தனர்.. ஆனால், அவரது உடல்நிலை குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த தற்கொலை முயற்சிக்கு முன்பு, விஜயலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.. அதில், "இதுதான் எனது கடைசி வீடியோ... கடந்த 4 மாசமாக நான் ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கிறேன். நான் இவ்வளவு நாள் அம்மாவுக்கும் அக்காவுக்காகவும் தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஹரி நாடார் உள்ளிட்டோர் மீடியா மூலம் என்னை தொடர்ந்து அசிங்கப்படுத்தி வந்தனர். இதற்கு மேல் என்னால் வாழ முடியாது.
நான் கர்நாடகாவில் பிறந்தவள் அப்படிங்கிற காரணத்தை வெச்சி என்னை டார்ச்சர் பண்ணியாச்சு.. என் குடும்பத்தை விட்டுட்டு போறேன்.. நான் ரொம்ப நாள் வாழ நினைத்தேன்... ஆனால், வாழ விடவில்லை என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.
அவரது தற்கொலை முயற்சி வீடியோவைப் பார்த்ததும் போலீஸார் விரைந்து சென்று மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. விஜயலட்சுமி வீடியோ மற்றும் தற்கொலை முயற்சி செயலால் நேற்று திடீரென பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications