Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஸ்திவாரமே ஆடுதோ? போலீசில் அப்படியென்ன சொன்னார் விஜயலட்சுமி? சீமான் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் பிப்ரவரி 27ம் தேதி நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.. அந்தவகையில் இன்றைய தினம் சீமான் வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராவாரா? மாட்டாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சீமான் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை.

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி போலீசில், கடந்த 2011-ல் தந்திருந்த புகாரை மீண்டும் பெற்றுக் கொண்டார். பிறகு, மீண்டும் சீமான் மீது விஜயலட்சுமி புகார் தந்திருந்தார்..

Seeman actress Vijayalakshmi Chennai Valasaravakkam

இந்த புகாரின் அடிப்படையில் ஐபிசி 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், "கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை, 2012ம் ஆண்டிலேயே விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக் கொண்டார். கடிதத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தி போலீசார் இந்த வழக்கை முடித்து வைத்துவிட்டனர். ஆனால், வேண்டுமென்றே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

சீமான் மனு தள்ளுபடி

சீமான் மனு மீதான வழக்கு கடந்த 17ம் தேதி, நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, "சீமான் மீதான இந்த வழக்கை ஆராய்ந்த பொழுது நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை. திரைத்துறை தொடர்பான சிக்கலில் இருந்த அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவில் இருந்துள்ளார். தன்னிடம் இருந்து பெருந்தொகை பெறப்பட்டதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் விஜயலட்சுமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது" என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அத்துடன் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை, 12 வார காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இன்று நேரில் ஆஜராக சம்மன்

இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் காவல் துறையினர் சம்மன் அனுப்பினார்கள்.. அதில், நாளை அதாவது 27ம் தேதி காலை 10 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது..

இதனிடையே, நடிகை விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.. பெங்களூரில் வசித்து வரும் விஜயலட்சுமியின் வீட்டிற்கே சென்று, சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போது, விஜயலட்சுமி தன்னுடைய புகார் குறித்து விரிவாக எடுத்துரைத்ததாக தெரிகிறது. மேலும், வழக்கு குறித்த புதிய ஆதாரங்களை சேகரித்து வாக்குமூலங்கள் விஜயலட்சுமியிடம் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆஜராவாரா? மாட்டாரா?

இந்நிலையில், இன்றைய தினம் சீமான் வளசரவாக்கம் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகக்கூடும் என்றார்.. எனினும்., கட்சி நிகழ்ச்சிகளில் தற்போது சீமான் கலந்து கொண்டிருப்பதால் இன்று விசாரணைக்கு ஆஜராக மாட்டார், காவல்துறையினரின் கேள்விகளை பெற்று அதற்கு பிறகு பதில் அளிக்கப்படும் என்று நாம் தமிழர் வழக்கறிஞர்கள் தரப்பில் சொன்னார்கள்..

வழக்கறிஞர்களின் மற்றொரு தரப்பில், சீமான் நிச்சயம் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று சொன்னார்கள்.. இருவகையான தகவல்கள் பரவிவருவதால் இன்று சீமான் விசாரணைக்கு ஆஜராவாரா? மாட்டாரா? என்ற பரபரப்பு கூடியது.

ஆனால், இன்று சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகவில்லை. சீமான் தரப்பு வழக்கறிஞர்கள், அவர் ஆஜராகாத காரணத்தை விளக்கி கோயம்பேடு காவல் துணை ஆணையர் அதிவீரபாண்டியனிடம் கடிதம் கொடுத்தனர்.

அந்த கடிதத்தில், "சீமான் ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருப்பதால் இன்றைய விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை; வேறு ஒருநாளில் விசாரணைக்கு ஆஜராவார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+