சீரியஸாகும் மேட்டர்.. சீமானுக்கு சிக்கல்! மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் தந்த விஜயலட்சுமி.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரில் நடிகை விஜயலட்சுமியை மாஜிஸ்திரேட் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்திருந்த நிலையில், நேற்று இரவு நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்தனர். இதில் பல விவரங்களை போலீசார் பெற்றுள்ளதாக அவர்கள் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

Actress Vijayalakshmi to give statement against Naam Tamilar Seeman to Court Magistrate

சீமான் மீதான புகார் குறித்து 8 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. துணை ஆணையர் உமையாள் விசாரணை அவரிடம் பல முக்கியமான கேள்விகளை எழுப்பினார். முக்கியமாக டார்ச்சர் செய்தது, கரு கலைத்தது, மிரட்டியது உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின் போது காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மறுத்ததாக கூறப்படுகிறது. சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியேற மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று விசாரணைக்கு இடையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விசாரணை காரணமாக எங்கே சீமான் கைது செய்யப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன சொன்னார்?: இந்த நிலையில்தான் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரில் நடிகை விஜயலட்சுமியை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் போலீசார். நேற்று 8 மணி நேரம் நடந்த விசாரணையில் ஆடியோ ஆதாரங்கள், வங்கி பண பரிவர்த்தனை, ஹோட்டல் அறையில் தங்கிய ஆதாரங்களை விஜய லட்சுமி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று போலீசார் விசாரணையின் போது நடிகை விஜயலட்சுமி நடந்து கொண்ட விதம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.விஜயலட்சுமி மிகவும் எமோஷனலாக காணப்பட்டு உள்ளார். அடிக்கடி விசாரணையில் அழுதுள்ளார்.

சீமானை கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த விசாரணையின் போது காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மறுத்ததாக கூறப்படுகிறது. சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியேற மறுப்பதாக கூறப்படுகிறது.

விசாரணையில் சில முக்கிய வீடியோக்களை விஜயலட்சுமி கொடுத்துள்ளார். முக்கிய போன் ரெக்கார்டுகள், மெசேஜ்கள், பணம் கொடுத்த வங்கி விவரங்களையும் விஜயலட்சுமி போலீசில் பகிர்ந்து உள்ளார்.

விசாரணை: சமீபத்தில் விஜயலட்சுமி தனது பேட்டியில் இந்த சமாதானம் விவகாரம் குறித்து விளக்கமாக பேசினார். அதில், உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். 2011 கேஸை மீண்டும் விசாரிக்க வேண்டும். இதில் விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சீமான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

அதனால் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஆகினோம். அதிமுக இதில் விசாரிக்கவே இல்லை. அவர்கள் என்னை மட்டுமே விசாரணை செய்தனர், சீமானை விசாரிக்கவில்லை. ஏன் சீமானை விசாரிக்கவில்லை என்பது எல்லோர்க்கும் தெரியும்.

சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானம் செய்தார். அதனால் அவர் கைது செய்யப்படாமல் இருந்தார். அவர் சமாதானம் செய்ததால் அவரை கைது செய்ய விடாமல் அமைதி செய்தோம்.

ஆனால் இப்போது இனியும் காத்திருக்க முடியாது. அவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். அவை விடக்கூடாது. சீமானை கைது செய்ய வேண்டும். சீமானை கைது செய்யாமல் இருக்க கூடாது. அவருக்கு எதிராக புதிதாக புகார் கொடுத்துள்ளோம்.

அவர் பேசியதை எல்லாம், அவர் சொன்னதை எல்லாம் போலீசுக்கு கொடுத்துள்ளோம். உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள். போலீஸ்தான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். நான் சில விஷயங்களை போலீசிடம் சொல்லி இருக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், என்று நடிகை விஜயலட்சுமி இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

விஜயலட்சுமி, இயக்குனர் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேரடியாக பாலியல் புகார்களை வைத்துள்ளார். முதலில் சீமான் தன்னை காதலித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

ஆனால் அதன்பின் என்னை ஏமாற்றிவிட்டார். என்னை பாலியல் ரீதியாக அவர் பயன்படுத்திக்கொண்டார் . திருமணம் செய்வதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். ஆனால் கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று விஜயலட்சுமி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+