சிக்கிய சீமான்! நடிகை விஜயலட்சுமியை சீரழித்த வழக்கு-விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்? அடுத்து கைது?
சென்னை: நடிகை விஜயலட்சுமியை பலாத்காரம் செய்து, கருக்கலைப்புக்குள்ளாக்கிய வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை போலீசார் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியலுக்கு வருவதற்கு முன்னர் திரைப்படத்துறையில் பணியாற்றினார். உதவி இயக்குநராக, இயக்குநராக இருந்த சீமான் இயக்கிய திரைப்படங்களும் பெரிய வெற்றி பெறவில்லை. அதேநேரத்தில் தந்தை பெரியாரின் பேரன், கார்ல் மார்க்ஸின் மாணவன், பிரபாகரனின் தம்பி என்ற வசனப் பேச்சுகளுடன் பெரியார் இயக்க மேடைகள் மூலம் அரசியல் அடையாளம் பெற்றார் சீமான்.

பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்ட சீமான்
ஆனால் 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்துக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதை வைத்து தம்மை விடுதலைப் புலிகளின் அடுத்த வாரிசு, பிரபாகரன் தம்மிடமே விடுதலைப் போராட்டத்தை ஒப்படைத்து சென்றுவிட்டதாக பல்வேறு பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டு நாம் தமிழர் கட்சியை நடத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் தந்தை பெரியாரையும் சீமான் இழிவாக பேச, அவரை நம்பி தமிழ்த் தேசிய அரசியல் களத்துக்கு வந்த பெரும்பாலானோர் நாம் தமிழர் கட்சியைவிட்டே ஓடிவிட்டனர்.
விஜயலட்சுமியை சீரழித்த சீமான்
இதனிடையே நடிகை விஜயலட்சுமி, சீமான் தம்மை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்தார்; கருக்கலைப்பு செய்ய வைத்தார்; இதன் பின்னரே முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் 2-வது மனைவியின் மகள் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார்; சீமானின் முதல் மனைவி நான் என்று அடுத்தடுத்து போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் இந்த புகார்களை சீமான் மிரட்டல் காரணமாக வாபஸ் பெறுவதாகவும் நடிகை விஜயலட்சுமி கூறி இருந்தார்.
அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்
தற்போதும் வீடியோக்களை வெளியிட்டு சீமானை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் நடிகை விஜயலட்சுமி. இந்த நிலையில் விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில் தம் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை டிஸ்மிஸ் செய்த நீதிபதி இளந்திரையன், விஜயலட்சுமியே பாலியல் புகாரை வாபஸ் பெற்றிருந்தாலும் பலாத்கார வழக்கை விசாரிக்க போலீசாருக்கு அதிகாரம் உண்டு. சீமான் மீதான விஜயலட்சுமியின் புகார் தீவிரமானது; அவவளவு எளிதாக விட்டுவிட முடியாது என்று கூறியதுடன் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய
வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்- அடுத்து கைது?
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 15 சாட்சிகளிடம் விசாரணை நடத்திய போலீசார், சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கின்றனர். ஏற்கனவே நீதிமன்றத்திலேயே போலீசார் தரப்பில், 2008-ம் ஆண்டே சீமானும் விஜயலட்சுமியும் மதுரை கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்; சீமானின் முதல் மனைவியே விஜயலட்சுமிதான் என தெரிவித்திருந்தது; அத்துடன் நடிகை விஜயலட்சுமியின் வாக்குமூலத்தையும் சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பு தாக்கல் செய்திருந்தது. இதனால் போலீசாரின் குற்றப்பத்திரிகையும் சீமானுக்கு எதிரானதாகவே இருக்கும்; ஆகையால் சீமான் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்றும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications