ஒவ்வொரு நிமிஷமும் நரகமா இருக்கு.. ரஜினி சாரை பார்க்கணும்.. நடிகை விஜயலட்சுமி உருக்கமான வேண்டுகோள்
ரஜினி தனக்கு உதவ வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கேட்டு கொண்டுள்ளார்
Recommended Video
சென்னை: "ஒவ்வொரு நிமிஷமும் செத்துட்டு இருக்கேன்.. எல்லாரும் என்னை கைவிட்டுட்டாங்க.. என்னை எப்படியாவது ரஜினி சாருகிட்ட கூட்டிட்டு போங்க.. அவரைதான் நம்பி இருக்கேன்" என்று பிரண்ட்ஸ் பட ஹீரோயின் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி, ப்ரண்ட் படத்துக்கு பிறகு ஒருசில படங்கள் தமிழில் நடித்தார். கடைசியாக 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார். தொடர்ந்து டிவி தொடர்களிலும் தலைகாட்டி வந்தார்.
பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டார். உயர் ரத்த அழுத்தம் பெரும் தொல்லையாக இவருக்கு இருந்தது. இதனால் பெங்களூருவில் சிகிச்சை எடுத்து கொண்டார்.

வேண்டுகோள்
அந்த சமயத்தில், விஜயலட்சுமிக்கு திரையுலகினர் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று அவரது சகோதரி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி திரைப்பிரபலங்கள் சிலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்திருந்தனர்.

வீடியோ
இந்நிலையில், தனது தாயாருக்கும், குடும்பத்துக்கும் உதவ வேண்டும் என்று விஜயலட்சுமியே வேண்டுகோள் விடுத்துள்ளார். இது சம்பந்தமாக பேசி ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில், நான் ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில் இருக்கிறேன், நான் அழிஞ்சு போகணும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க.

ரஜினி சார்
என் குடும்பம் இப்போ சொல்ல முடியாத கஷ்டத்துல இருக்கு. இதை ரஜினி சாரால் மட்டுமே சரி செய்ய முடியும். ஆனா, என்னை யாரும் அவர்கிட்ட கூட்டிட்டு போக மாட்டேங்கறாங்க. அதனாலதான் இந்த வீடியோ வெளியிடறேன். இதை அவருக்கிட்ட எப்படியாவது ரீச் பண்ண வெச்சிடுங்க. அவரால மட்டுமே எனக்கு உதவ முடியும்" என்று கூறியுள்ளார்.

பதிலடி
ஏற்கனவே இதற்கு முன்பு, அவரது சகோதரி உதவி கோரியிருந்தபோது, "யாருமே உதவி கேட்டும் கன்னட நடிகர்கள் சிலர் உதவி செய்யவில்லை" என்று விஜயலட்சுமி குற்றம்சாட்டி வீடியோவே போட்டிருந்தார். இதற்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் பதில் அளித்திருந்தார்.

கடின உழைப்பு
அதில், "விஜயலட்சுமிக்கு தொடர்ந்து உதவி செய்துட்டே இருக்க முடியாது. கை, கால் எல்லாம் நல்லாதானே இருக்கு.. உடலில் குறை இருக்கிற மனுஷங்களே கடினமாக உழைச்சு வாழும்போது, நல்லா இருக்கும் அவர் ஏன் தன்னை கவனித்து கொள்ள முடியாது? ஒருத்தருக்கு உதவி செய்யணும்னா அந்த எண்ணம் முதலில் நமக்கு உள்ளே இருந்து வரணும்" என்று கூறியிருந்தது தற்போது நினைவுகூரத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications