விருதுநகருக்கு ஏன் போகலை.. கனிமொழியை விமர்சித்த நடிகை விந்தியா.. நடிகர் விஜய் மீதும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதை கணடித்து அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தின் போது திமுக எம்பி கனிமொழி, நடிகர் விஜய் ஆகியோரை நடிகை விந்தியா கடுமையாக விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை விந்தியா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில் எனக்கு சுற்றி வளைத்து எல்லாம் பேச தெரியாது. நான் நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதுமே மக்கள் நலனுக்காக அதிமுக குரல் கொடுக்கும்.

வாக்குறுதிகள்

வாக்குறுதிகள்

கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி மக்கள் திமுகவுக்கு வாக்களித்தார்கள். ஆனால் அந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எங்கேயோ 50 ஆவது பக்கத்தில் இருக்கிற வாக்குறுதி, 60 ஆவது பக்கத்தில் உள்ள வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு நாங்கள் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்கிறார்கள்.

இரு ஆண்டுகள்

இரு ஆண்டுகள்

கடந்த இரு ஆண்டுகளாக கொரோனாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கஷ்டப்பட்டார்கள். இப்போதுதான் கொரோனா குறைந்தது என மக்கள் நிம்மதி பெரூமூச்சு விடுவதற்குள் 150 சதவீதம் சொத்து வரியை ஏற்றிவிட்டார்கள். மக்கள் எப்படி வாழ்வார்கள்? இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் கே என் நேரு சொல்றாரு, இதை நாங்கள் ஏற்றவில்லை. மத்திய அரசுதான் உயர்த்தியது என்கிறார்.

150 சதவீதம் சொத்து வரி

150 சதவீதம் சொத்து வரி

மத்திய அரசு எப்போது சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்த சொல்லியது, யாரை ஏமாற்ற இவர்கள் பேசுகிறார்கள்? திமுக ஆட்சிக்கு வந்து எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. ஆனால் இந்த 10 மாதங்களில் ஒன்றே கால் லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. அவ்வாறு வாங்கிய கடனில் மக்களுக்கு என்ன செய்தீர்கள்?

 பெண்களுக்கு ரூ 1000 கொடுத்தார்களா

பெண்களுக்கு ரூ 1000 கொடுத்தார்களா

மகளிருக்கு ரூ 1000 கொடுத்தார்களா, கேஸ் சிலிண்டருக்கு ரூ 100 குறைத்தார்களா, எதுவுமே செய்யவில்லை. நம் அரசை கிண்டல் செய்தார்கள். உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை என கூறி செங்கல்லை கையில் வைத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று காண்பித்தார். ஒன்றே கால லட்சம் கோடி கடன் வாங்கினீர்களே, மத்திய அரசை பார்க்க சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு சென்றீர்களே.

 செங்கல்

செங்கல்

ஒரு 10 செங்கல்லை வைத்து கட்டியிருக்கலாமே. ஒரு பக்கம் சுவற்றையாவது எழுப்பியிருக்கலாமே. எதுவுமே செய்யவில்லை. அப்போ ஊர் ஊராக சென்ற உதயநிதி ஸ்டாலின் இப்ப ஒரு வருஷம் ஆயிற்றே தெருமுனை கூட்டங்களை நடத்தச் சொல்லுங்க பார்ப்போம்! மக்களை சந்திக்க சொல்லுங்களேன் பார்க்கலாம். சும்மா டீக்கடையில் ஸ்டாலின் டீ குடிச்சாரு, ஈசிஆர் சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டினாரு. வாக்கிங் போனாரு, செல்பி எடுத்தாரு. ஆமா துபாய்க்கு ஏன் அவர் தனி விமானத்தில் சென்றார். மக்களோடு மக்களாகவே எமிரேடஸ் விமானத்திலேயே துபாய்க்கு போயிருக்கலாமே.

கனிமொழி எங்கே

கனிமொழி எங்கே


பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தை எல்லாரும் பெரிதுப்படுத்தினார்கள். அது ஒரு கஷ்டமான சம்பவம்தான். மனம் வலிக்கக் கூடிய அளவுக்கு நடந்த சம்பவம். இந்த வழக்கை நேர்மையாக வழக்கை விசாரித்து, கேஸை நடத்தி சிபிஐக்கு ஒப்படைத்தது நமது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி.

சென்னை டூ பொள்ளாச்சி

சென்னை டூ பொள்ளாச்சி

அந்த சம்பவம் நிகழ்ந்த போது சென்னையிலிருந்து பொள்ளாச்சி வரை போய் நடுத்தெருவில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார் திமுக எம்பி கனிமொழி. தற்போது சென்னை ராமாவரத்தில் அதே மாதிரியான ஒரு சம்பவம், அதை விட பெரிய சம்பவம். விருதுநகர் சம்பவம், ஒரு பெண் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம். எங்க திரும்பினாலும் பெண்களுக்கு எதிராக எத்தனையோ அநியாயங்கள் நடக்குது. இந்த சம்பவத்திற்கெல்லாம் யாராவது போராடினார்களா.

 சினிமா

சினிமா

சினிமா இன்று சுதந்திரமாகவே இல்லை. ஒன்று நடிகர்கள் எல்லாம் சன் பிக்சர்ஸிலோ அல்லது ரெட் ஜெயிண்ட் மூவிஸிலோ நடிக்க வேண்டும். இல்லாவிட்டால் யார் படம் எடுத்தாலும் இந்த இரு நிறுவனங்களுக்கே விற்க வேண்டும். ஆனால் புரட்சித்தனமா பேசுகிற நடிகர்களோ தைரியமா குரல் கொடுக்கிற நடிகர்களோ ஒருவர் கூட இதுவரை வாயே திறக்கவில்லை.

விஜய் எங்கே

விஜய் எங்கே

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல யார் யாரோ போனார்கள். அனிதாவின் வீட்டில் நின்று கொண்டு கண்ணீர் விட்டு சோகக் கடலில் இருந்தார்கள். ஆனால் இந்த திமுக ஆட்சியில் நீட் தேர்வால் மாணவர்கள் 3 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். எந்த நடிகராவது அவர்களுடைய வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்தார்களா? 5 ஆண்டுகளில் மக்கள் திமுகவை துரத்தி அடிப்பார்கள் என விந்தியா பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+