இதெல்லாம் ரொம்ப அநியாயம்ங்க! ஓ.பன்னீர்செல்வத்தை கைது செய்யணும்! நடிகை விந்தியா ஆவேசம்!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை கைது செய்ய வேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் நடிகையுமான விந்தியா.
நேற்று வரை ஓ.பன்னீர்செல்வம் மீது தனக்கு மரியாதை இருந்ததாகவும் ஆனால் இன்று அவரே அதனை கெடுத்துக்கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் செய்த காரியம் அநியாயமானது என ஆவேசம் பொங்க தெரிவித்துள்ளார் நடிகை விந்தியா.

நடிகை விந்தியா
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை கிடைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சி தருவதாக கூறிய அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் விந்தியா, ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம் இன்று நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றாலும் கூட அவர் தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிமுக அலுவலகம்
அதிமுக என்ற குடும்பத்தின் மூத்தவர் என்ற முறையில் நேற்று வரை ஓ.பன்னீர்செல்வம் மீது தாம் மரியாதை வைத்திருந்ததாகவும் ஆனால் சொந்த வீட்டிலேயே அவர் கொள்ளையடிக்க வேண்டும் என எப்போது துணிந்துவிட்டாரோ அப்போதே அவர் மீதான மரியாதை போய்விட்டதாக கூறியுள்ளார். பொருளாளராக பொதுக்குழுவுக்கு அவர் வர வேண்டும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்ததாக கூறினார்.

கைது செய்யணும்
அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைக்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என்று கூறிய நடிகை விந்தியா, நியாயமாக பார்த்தால் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் திட்டமிட்டு நுழைந்து அங்கிருந்த ஆவணங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு போனதற்காக ஓ.பன்னீர்செல்வம் மீது தான் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். சட்டப்படி இந்த விவகாரத்தை எதிர்கொள்வோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

நியாயம் இல்லை
அதிமுக தலைமைக்கழகம் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்பதை போல் ஓ.பன்னீர்செல்வம் காட்டுவது நியாயமற்ற செயல் என்றும் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அக்கட்சி அலுவலகத்தின் மீது உரிமை இருக்கிறது எனவும் கூறியிருக்கிறார்.
-
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி












Click it and Unblock the Notifications