சரிங்க.. சும்மா மன்னிச்சுட்டே இருக்க முடியாது.. செம கோபத்தில் விந்தியா.. இதெல்லாம் "அவருக்கு" தேவையா
நடிகை விந்தியா நயினார் சர்ச்சை பேச்சு குறித்து கருத்து கூறியுள்ளார்
சென்னை: அடிக்கடி மன்னிச்சுட்டே இருக்க முடியாது.. இனி யாராவது அதிமுகவை பற்றி பேசினால் அவ்வளவுதான் என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும் நடிகையுமான விந்தியா காட்டமாக எச்சரித்துள்ளார்.
ஆளுங்கட்சியான திமுகவை விமர்சித்து, குற்றஞ்சாட்டுவதற்கு பதிலாக கூட்டணி கட்சியையே சீண்டி உள்ளுக்குள்ளேயே புகைச்சலை அதிகரித்துவிட்டார் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்.
கடந்த வாரம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பாஜக போராட்டத்தில் பேசிய நயினார், "பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது...

அண்ணாமலை
அண்ணாமலை துணிச்சலாக கேள்வி எழுப்பி வருகிறார்... ஆனால், சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை" என்று சற்று காட்டமாகவே பேசியிருந்தார். பாஜகவில் வேறு யார் பேசினாலும் அதை அதிமுக கண்டுகொள்ளாமல் விட்டிருக்குமோ என்னவோ? ஆனால் அதிமுகவிலேயே இருந்து பதவியையும் அனுபவித்துவிட்டு வேறு கட்சிக்கு சென்றுள்ள நயினாரா இப்படியெல்லாம் பேசியது என்று அதிமுக அதிர்ந்துவிட்டது..

கண்டனம்
இதுவரை அதிமுக மேலிடம் நாகேந்திரனின் பேச்சுக்கு எவ்வித கண்டனத்தையும் நேரடியாக பதிவு செய்யவில்லை.. ஆனாலும், நிர்வாகிகள் பலர் அவருக்கு எதிராக புகார் கொடுத்து கொண்டே இருக்கிறார்கள்.. இதனிடையே, தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று நயினார் விளக்கம் தந்திருந்தார்.. மற்றொருபுறம், நயினார் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று அண்ணாமலை கூறியிருந்தார்.. அத்துடன் அதிமுக மேலிடத்திடம் மன்னிப்பும் கோரியிருந்தார்..

முதுகெலும்பு
ஆனாலும் அதிமுக அந்த சம்பவத்தை மறக்கவில்லை என்றே சொல்கிறார்கள்.. அதிமுக மேலிடமாவது பரவாயில்லை, அதிமுகவின் தொண்டர்கள், தீவிர விசுவாசிகள் கொந்தளித்து போயுள்ளனராம்.. அதிமுக எம்எல்ஏக்களை ஆண்மை இல்லாதவர்கள், முதுகெலும்பு இல்லாதவர்கள் என்ற வார்த்தைகளை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.. அதனால்தான், இந்த முறை அவர்களுடன் கூட்டணி வேண்டாம் என்று கடந்த வாரமே மா.செ.க்கள் அதிமுக மேலிடத்திடம் வலியுறுத்தியதாகவும் செய்திகள் வந்தன.

தனித்து போட்டி
இதுவரை அமைதியாக இருந்துவந்த அதிமுக தலைமை, கடைசியில் கூட்டணி விஷயத்தில் தன் கறார்தன்மையை காட்ட துவங்கியது.. உள்ளாட்சி தேர்தலில் 30 சதவீத இடங்களை எதிர்பார்த்த பாஜகவுக்கு 10 சதவீத இடங்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்று சொல்லிவிடவும், இறுதியில் பாஜக தனித்து போட்டியிடும் சூழநிலைக்கு வந்துவிட்டது.. அப்போதுகூட, தனித்து போட்டியடுவதற்கு நயினார் பேசியது காரணமில்லை என்று அண்ணாமலை மறுபடியும் விளக்கம் தரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.. அதேசமயம், அதிமுகவுடன் நட்பு தொடரும், கூட்டணியில் பாஜக தொடருகிறது என்று ஒரு முன்ஜாக்கிரதையாகவே நாசூக்காக அறிவித்திருக்கிறார் அண்ணாமலை.

விந்தியா
இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் விந்தியா பேசும்போது, "நயினார் நாகேந்திரன் பேசியது போல இனிமேல் யாராவது பேசினால் தக்க பதிலடி கொடுப்போம்.. அடிக்கடி மன்னித்து கொண்டே இருக்க முடியாது என்று தடாலடியாக கருத்து கூறியுள்ளார்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை கழட்டி விட்டதால், சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காகவே அதிமுக இப்படி செய்திருப்பதாக விமர்சனங்கள் எழுகிறதே என்று விந்தியாவிடம் மறுகேள்வி எழுப்பப்பட்டது..

சிறுபான்மையினர்
அதற்கு அவர், தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை என்பதுதான் பாஜகவோடு கூட்டணி இல்லாததற்கு காரணம்.. சிறுபான்மையினர் வாக்கு வங்கி குறித்து பயம் இருந்திருந்தா சட்டப்பேரவை தேர்தலையே தனியா சந்திருப்போமே என்று பதிலளித்தார் விந்தியா... ஒருகாலத்தில் அதிமுகவில் அமைச்சராகவும், சீனியர் புள்ளியாகவும் வலம் வந்த நயினாருக்கு, விந்தியா எச்சரிக்கை விடுத்து போல பேசியுள்ளது சலசலப்பை பாஜகவுக்குள் ஏற்படுத்தி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications