மநீமவில் இணைந்த பிரபல நடிகை வினோதினி.. முதல் ட்வீட்டே அதகளம்.. ஒரு கட்சியையும் விட்டு வைக்கலயே!
சென்னை: பிரபல திரைப்பட நடிகை வினோதினி வைத்தியநாதன், கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்ததுமே அவர் பதிவிட்ட ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை வினோதினி வைத்தியநாதன். 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான வினோதினி, அண்மையில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு பணிப்பெண் தோழியாக நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துகளையும் பதிவிடுவார் வினோதினி. ஜிஎஸ்டி விவகாரம், அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு, சமீபத்திய மல்யுத்த வீரர்களின் போராட்டம் பற்றிய பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து குறித்தெல்லாம் விமர்சித்து கிண்டலாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து, தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார். மநீம-வில் இணைந்த கையோடு ஒரு ட்வீட்டையும் பதிவு செய்துள்ளார் வினோதினி. அதில் தான் ஏன் பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணையவில்லை என்பதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
கடவுள் டு அஞ்ஞானவாதி: நான் உன்ன படைச்சேன்… நீ எனக்கு என்ன செஞ்சே?
— Vinodhini Vaidynathan (@VinodhiniUnoffl) June 13, 2023
அஞ்ஞானவாதி: நீ படைச்ச எல்லாருக்கிட்டையும் போயி டேய் நீங்க எல்லாரும் கடவுள்தாண்டா, அதுக்கு எதுக்குடா உங்களுக்குள்ள சண்ட போட்டுக்குறீங்கன்னு சொல்லிட்டிருக்கேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: மய்யத்துல என்ன பொறுப்புல… pic.twitter.com/BTtR8dN9SL
வினோதினி வைத்தியநாதனின் லேட்டஸ்ட் ட்வீட் வருமாறு:
கடவுள் டு அஞ்ஞானவாதி: நான் உன்ன படைச்சேன்... நீ எனக்கு என்ன செஞ்சே?
அஞ்ஞானவாதி: நீ படைச்ச எல்லாருக்கிட்டையும் போயி டேய் நீங்க எல்லாரும் கடவுள்தாண்டா, அதுக்கு எதுக்குடா உங்களுக்குள்ள சண்ட போட்டுக்குறீங்கன்னு சொல்லிட்டிருக்கேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: மய்யத்துல என்ன பொறுப்புல இருக்க?
அஞ்ஞானவாதி: இருக்கேங்குற பொறுப்புல இருக்கேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, நீ பிறப்பால் இந்து.. இந்து மதக்கொள்கைய அடிப்படையா கொண்ட கட்சிக்குப் போயிருக்கலாமே?
அஞ்ஞானவாதி: வாரத்துக்கு ஒரு முறை கள்ள ஆடியோ வீடியோ ரெக்கார்டிங் இருக்கான்னு வீட்ட, காரெல்லாம் debug பண்றதுக்கு காசில்ல சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ பகுத்தறிவு பேசுற கட்சி?
அஞ்ஞானவாதி: பகுத்தறிவா? அப்படினா என்னன்னு கேக்குறாங்க சாமி. அதுலயும் யாகம்லாம் செய்யுறாங்க.
கடவுள் டு அஞ்ஞானவாதி: அப்போ கரப்ஷன்? மதவாதப் பிரிவினை?
அஞ்ஞானவாதி: எந்தப்பக்கம் நடந்தாலும் குரல் கொடுப்பேன் சாமி.
கடவுள் டு அஞ்ஞானவாதி: சரி, அப்போ ஏன் மய்யம்? ஒரு சீட்டு கூட இல்லையே?
அஞ்ஞானவாதி: சீட்டு குலுக்கிப்போட்டு இந்த பதவி எடுத்துக்கோ அந்தப்பதவி எடுத்துக்கோங்குறதுக்கு இங்க வாரிசு அரசியல் இல்லையே சாமி. சார்ஜ் சீட் செய்யப்பட்ட ஆளுங்களும் இல்லையே சாமி... சீட்டு விளையாடுறத ஆதரிக்கிற கூட்டமும்...
கடவுள்: போதும் போதும்... சீட் என்று மூன்று முறைக்கு மேல் சொல்லியதால் நீ ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டாய்.
அஞ்ஞானவாதி: இப்போதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது சாமி.
ஆரம்பிக்கலாங்களா?
மய்ய அரசியல..!
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி!












Click it and Unblock the Notifications