Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முட்டுக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.. கெட்ட வார்த்தை, கெட்ட வார்த்தை.. நடிகை வினோதினி ஒரே போடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் கட்சியை சேர்ந்த வினோதினியின் பதிவு ஒன்று இணையத்தில் மறுபடியும் வைரலாகி கொண்டிருக்கிறது.. சென்னையில் பொதுமக்கள் மழைநீரில் தத்தளித்து வரும்நிலையில், இந்த ட்வீட்டினை பலரும் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம்?
கடந்த 2011ம் ஆண்டு வெளியான "எங்கேயும் எப்போதும்" படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வினோதினி வைத்தியநாதன். இப்போதுவரை முன்னணி நடிகர்களின் படங்களில் விடாமல் நடித்து கொண்டிருக்கிறார்.. ஆரம்பத்தில் எந்த கட்சியிலும் சேராத நிலையில், கடந்த வருடம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்..

actress vinodhini chennai rain

மத்திய அரசு: ஆனால் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருபவர் வினோதினி. இவரது பெரும்பாலான பதிவுகள், மத்திய அரசை கடுமையாக தாக்கியே இருக்கும்..

அதனால்தான், பாஜகவை விமர்சிக்கும் இவரது பதிவுகள், பொதுமக்களின் கவனத்தையும் திருப்பியது.. இறுதியில் மநீமய்யத்தில் இணைந்து தற்போது கமல் கட்சிக்கு பெரும் ஆதரவாகவும், பலமாகவும் திகழ்ந்து வருகிறார்.

திமுக கூட்டணி: தற்போது திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம்பெற்றுள்ள நிலையில், விநோதினியின் பல பதிவுகளை, திமுக கூட்டணி தொண்டர்களும் ஷேர் செய்து வருகின்றனர்.

சென்னையில் மழை ஓயாமல் பெய்து வருகிறது.. கடந்த 3 நாட்களாக பெய்த மழைநீரில், சென்னையின் பல பகுதிகள் தத்தளிக்கின்றன. பல்வேறு முன்னெச்சரிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருந்தபோதிலும், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதாக முணுமுணுப்புகள் எழுந்து வருகின்றன. எதிர்க்கட்சிகளும் இதனை விமர்சித்து வருகின்றன.

மற்றொருபுறம் திமுக முன்னெடுத்த பணிகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் கூட்டணி கட்சிகள், அரசின் செயல்பாட்டுக்கு வாழ்த்தும் கூறிவருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், நடிகை வினோதினி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. இதை பார்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளே ஆடிப்போய்விட்டன..

நடிகை வினோதினி வைத்தியநாதன் பதிவு இதுதான்:

"முட்டுக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

Scientific முட்டு:

மீன் ஸீ லெவல்னா என்னன்னு தெரியுமா? (Continues to write an essay on mean sea level).

Though our stomach and mouth are very near and within same body time is required for digestion. #coovam may be near but there is a time called "Reasonable period " which is required for all mechanisms.

கேள்வி கேக்குற டைப் முட்டு:

Floodingக்கு definition தெரியுமா?

இன்னிக்கு எவ்ளோ mm தண்ணி வந்துது தெரியுமா?

Testimony type முட்டு:

மழை நீர் எங்கேயும் தேங்கல. நான் இப்போதான் கிண்டி வழியா வந்தேன், இப்போதான் டீ நகர் வழியா வந்தேன், இப்போதான் வழியா வந்தேன்...

ஆதங்க முட்டு:

இந்த நேரத்துலதான் கேள்வி கேப்பீங்களா?

சலிச்சுக்கற முட்டு:

ஏன் எதிர்கட்சிலேர்ந்து யாருமே களத்துல இல்ல? ஏன் எல்லாத்தையும் நாமளே பார்க்கவேண்டியிருக்கு?

ஏன் volunteers யாரும் களத்துல இல்ல? ஏன் public யாரும் களத்துல இல்ல? ஏன் எல்லாத்தையும் நாமளே பார்க்கவேண்டியிருக்கு?

போட்டி முட்டு:

உங்க அம்மா இருந்தபோது செம்பரம்பாக்கம்...

உங்க அண்ணன் என்ன பெரிய...

நீங்கல்லாம் பேசலாமா...

25 கோடி வாங்கிட்டு...

அடிச்சுவிடுற முட்டு:

Efficient draining of water is impacted by overflow of the system to which it is effectively drained and the ratio of draining is directly proportional to the cos theta sin theta of the underwater current to which it can flow and this is helped by the gradient to follow up with the process of the ayyo ithukku mela enna solli muttukkuduppen to the pumping station and the gradient is the average mean level to which it will outflow through the inflow and then it will join the sea through the canal into the rain.

கவியரங்குக் கவிஞன் முட்டு:

சென்னையை மீட்ட

வெள்ள நிவாரண வள்ளலே

தமிழனை காத்த தலைவா/வி

காட்டமான முட்டு:

கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தை

Finger pointing முட்டு:

உங்கள யாரு குளத்துல வீடு கட்ட சொன்னது?

மக்களுக்கு பொறுப்பில்ல. குப்பையகூட சரியா கொட்டமேட்டேங்குறீங்க.

ரைட் அப் முட்டு:

இப்படித்தான் 30000 வருஷத்துக்கு முன்னால, இதே மாதிரி ஒரு பேரிடர் உலகத்த சூழ்ந்தது. அப்போ அங்க இருந்த குரங்குகளும் யானைகளும் கூக்குரலிட்டு ஓடினாங்க. ஏன்னா பூமியுடைய புவி ஈர்ப்பு சக்திக்கும் நிலவுடைய...

வெதர்மேன் முட்டு:

மழை வந்தா தண்ணி நிக்கத்தான் செய்யும். பாம்பு கடிக்கத்தான் செய்யும். நாய் ஊளையிடத்தான் செய்யும். ரிவெர்ஸ் கியர் போட்டா வண்டி பின்னால போகத்தான் செய்யும். பூமி சுத்தத்தான் செய்யும். காற்று அடிக்கத்தான் செய்யும்.

ஆங்கில ஒரு வரி (one-liner) முட்டு:

Terrific work.

Amazing drain of water in all artillery roads.

Superb work by GCC.

Hats off.

Wonderful job,

கணக்கு முட்டு:

இன்னிக்கு 56 mm கன அடி மழை... mmஅ cmஆ convert பண்ணி பார்த்தா...

உபிக்கு 32000 கோடி தமிழ்நாட்டுக்கு வெறும் 7200 கோடி... 32000த்த 3ஆல வகுத்தா..

மழைநீர் 77% வடிஞ்சிருக்கு... 77அ 5ஆல பெருக்கினா...

Climate change முட்டு:

இந்த மழையே அண்டார்டிகால ஐஸ் கேப்ஸ் மெல்ட் ஆகறதுனாலதான்.

இப்படித்தான் 100000 ஆண்டுக்கு முன்னால பூமியோட தட்பவெட்ப நிலை....

Before/after முட்டு:

Photo or video before and after rains.

சாப முட்டு:

குறை சொல்ற நீங்கல்லாம் நல்லாவே இருக்கமாட்டீங்கடா..

To be continued.... என்று நடிகை வினோதினி வைத்தியநாதன் தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+