நடிகை வினோதினிக்கு அப்படி என்ன கோபம்? பாஜக, திமுக, அதிமுக! கமலை விமர்சித்த எல்லோரையும் விளாசிட்டாரே
சென்னை: கமல்ஹாசனையும் மக்கள் நீதி மய்யம் கட்சியை விமர்சிப்பவர்களை கடுமையாக சாடி இருக்கிறார் அக்கட்சியை சேர்ந்த நடிகை வினோதினி வைத்தியநாதன்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ள அவர், "நாங்கள் (மநீம கட்சிக்காரர்கள்) போடும் பதிவுகளிலெல்லாம் வந்து வாந்தியெடுக்கும் உயிரினங்களுக்கு நாங்கள் சொல்லக் கடமைப்பட்டவை:

1. யாருகூட வேணா கூட்டணி வைப்போம், என்னாங்குறீங்க இப்போ? பாசிச பாஜக குஜகன்னு உங்களுக்கு காரணம்லாம் கொடுக்கவேண்டிய அவசியமில்ல.
2. ஆமாம், எங்க தலைவர் திமிரு புடிச்சவர்தான், என்ன இப்போ?
3. பதவி எங்களுக்கு வேணும். என்ன இப்போ? மக்களுக்காக ஒரு விஷயமாவது இந்த கட்சி செஞ்சுதுன்னு சொல்ல பணமும் தேவை, பதவியும் தேவை. உங்க கட்சித் தலைவர்கள இந்த ரெண்டும் எப்படியெல்லாம் பேயாட்டம் வெறியாட்டம் ஆடவைக்குதுனு தினம் தினம் பார்த்துட்டுதானே இருக்கோம்.
4. எங்க தலைவரோட தனிப்பட்ட வாழ்க்கைய பத்தி எங்களுக்குத் தெரியும். எப்படி தெரியுமா? ஏன்னா அவரே அதைப்பத்தி ஓப்பனாதான் இருந்திருக்காரு.
5. 40 வருஷமா இருக்குற கட்சி இன்னும் ஒரு சீட்டு கூட வாங்கமுடியல, இதுல தேர்தல்லேர்ந்து பின் வாங்குறேன் ஊக்கு வாங்குறேன்னு பேச்சு வேற. நாங்க மூணு தேர்தல பார்த்திருக்கோம் ஆரம்பிச்ச ஆறு வருஷத்துல. பின் வாங்குறதுக்கு நாங்க என்ன நண்பர்களிடம் மாசா மாசம் கடன் வாங்கியா வாழ்க்கைய நடத்துறோம்... தலைவர் உட்பட எல்லோருடைய சொந்த வருமானத்துல நடக்குது.
6. அப்புறம் அது என்ன ஆ ஊன்னா கமல் ஒரு பிராமணர்ன்னு ஒரு உருட்டு? இன்னொரு பக்கம் அவரு மிஷனரினு ஒரு உருட்டு? ஜாதி ஓட்டுக்கள வெச்சு மட்டுமே அரசியல் பண்ணின உங்களுக்கு இதைத்தவிர வேற என்ன தெரியும்? ஆன்... மதம் தெரியும்ல. மறந்துபோச்சு பாருங்களேன். அவரு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு ஆதரவுன்னு வேற ஒரு உருட்டு. கலர் கலரா இன்னும் உருட்டுங்க.
8. கட்சியில யாருமில்ல, இவரு பார்ட் டைம் பொலிட்டீசியன். சரி... நீங்கள்லாம் முழு நேரம் தானே? வேங்கைவயல், ராமர் கோவில், ஹிந்தி திணிப்பு, நீட், கிளாம்பாக்கம், பணவீக்கம், விவசாயி தற்கொலை, வெள்ள நிவாரணம், fair tax devolution, லாக்கப் கொலைகள், 30000 கோடி, 4000 கோடி, பான்க் அகவுண்டுல 15 லட்சம், 2 கோடி புது கோடீஸ்வர பெண்கள், மணிப்பூர், மல்யுத்த வீராங்கணைகள் போராட்டம் - எல்லாமே கரெக்டா செஞ்சுட்டீங்களா, தீர்வு வந்துதா? பதவி எங்க கைக்கு வர்ற வரைக்கும் எங்க தலைவர் தினமும் ஓசி சோறு தின்னுட்டு, கட்சியில இருக்குறவங்கள ஆடியோ வீடியோ எடுத்து எக்ஸ்போஸ் பண்ணிட்டு, இல்ல இன்னொருத்தர் மாதிரி பழைய காதலியோட சமூகவலைதளத்துல சண்ட போட்டுட்டு, தேவையில்லாம ப்ரெஸ் மீட்டுங்குற பேருல தினமும் கம்பு சுத்திட்டு, ரெண்டு மணி நேரம் வாக்கிங் போயிட்டு இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களா? அவர் தன்னோட துறைல உச்சத்துல இருக்காரு. நேரத்த செலவிடறத பத்தி அவருக்கு நீங்க பாடம் எடுக்க வேணாம்.
9. ஏழாவது பாயிண்ட நான் எழுதவே இல்லன்னு எத்தன பேரு கவனிச்சீங்க.
10. டாக்டர்னு போலியான டைட்டில் வெச்சுட்டு ஸ்பேஸஸ்ல நாலு பேர கூட்டி வெச்சுக்கிட்டு பேசுறவங்களுக்கே எதோ பெருசா சாதிச்சிட்ட மாதிரி தெரியுதே... ஐயோ ஐயோ..
11. டார்ச் லைட்ல் பேட்டரி இருக்கோ இல்லையோ, முதல்ல இலை வாடிப்போச்சா, தாமரை சேத்துல முழுகிடுச்சா, சூரியன் அஸ்தமனமாச்சா, etc etc போயி பாருங்க." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications