ஒரே வார்த்தை.. சோலி முடிஞ்சுது.. குஷ்பு சொன்னது "Olé விளக்கம்" நடிகை வினோதினி பதிலடி
சென்னை: சேரி மொழிக்கு பிரெஞ்சில் குஷ்பு சொன்னது Olé விளக்கம் என பதிலடி கொடுத்த நடிகை வினோதினி, அந்த கெட்ட வார்த்தைக்கு ஸ்பானிஷ் மொழியில் அர்த்தத்தை கூறியுள்ளார்.
ஒரு பிரச்சினைக்கு வரிந்து கொண்டு வந்துவிட்டு, அதற்கு கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் பொங்கும் போது நிதானமின்றி சில புதிய பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள். அந்த வகையில் குஷ்பு பெண்களுக்காக த்ரிஷாவுக்காக குரல் கொடுக்கிறேன் என்ற பெயரில் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கிவிட்டார்.

த்ரிஷா விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் சொன்ன கருத்துக்கு மட்டும் பொங்கும் குஷ்பு, மணிப்பூர் பக்கம் கூட செல்லாதது ஏன் என குஷ்புவுக்கு சமூகவலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் குஷ்பு தனது ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத்தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது இதுதான். சாரி! என்னால் உங்களை போல் சேரி மொழியில் பேச முடியாது. ஆனால் என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண்ணைத் திறந்து பாருங்கள் என தெரிவித்திருந்தார். குஷ்பு தனது பதிவில் சேரி மொழி என பயன்படுத்தியதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெண்களை இழிவுப்படுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு சேரி மொழி என முத்திரை குத்துகிறார் குஷ்பு. இதற்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரின் ஆதங்கங்கள் வலுத்தன. இந்த நிலையில் சேரி மொழி என தான் கூறியதற்கு புதியதொரு விளக்கத்தை குஷ்பு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: நான் பயன்படுத்திய மொழி தொடர்பாக கோபமடைந்து வந்த கூட்டத்தை பார்த்தால் எனக்கு காமெடியாக இருக்கிறது. பெண்களுக்கான பிரச்சினைகளின்போது இந்த கூட்டம் மவுனமாகிவிடுகிறது. படிக்காதவர்களுக்கு நான் விளக்கிவிடுகிறேன். என்னுடைய ட்வீட்டை கிண்டலுடன் பதிவிட்டிருந்தேன். சேரி என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள். நான் அன்பை பகிர்ந்து கொள்கிறேன் என கிண்டலாக தெரிவித்தேன். இவ்வாறு ட்விட்டரில் விளக்கியுள்ளார்.
குஷ்புவின் இந்த பதிலுக்கு பலர் கெட்ட வார்த்தைகளை கூறி அதற்கு வேறு மொழியில் அர்த்தம் கூறி வருகிறார்கள். காயத்ரி ரகுராமோ, சேரிக்கு அன்பானவர் என பிரெஞ்சில் அர்த்தம் எடுத்துக் கொண்டால், மன்சூர் அலிகான் கூறிய ரேப் என்ற வார்த்தைக்கு ஏன் நாளை என்ற அர்த்தத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த வகையில் குணச்சித்திர நடிகை வினோதினியும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குஷ்பு சொன்ன விளக்கம் Olé விளக்கம். இங்குதான் தமிழக மக்கள் கோபப்படாமல் நான் என்ன நினைத்து அந்த வார்த்தையை கூறினேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது Olé என்ற ஸ்பானிஷ் மொழியைதான் நான் பயன்படுத்தினேன். அந்த வார்த்தைக்கு ஸ்பானிஷ் மொழியில் தைரியம், ஆச்சரியம், ஒப்புதல் என்றுதான் அர்த்தம். தமிழ் அர்த்தத்துடன் இந்த வார்த்தைக்கு தொடர்புபடுத்த ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.
அவர் பயன்படுத்திய Olé என்ற வார்த்தையை தமிழில் படித்தால் கெட்ட வார்த்தையாக கேட்கும். இதே அதற்கு வேறு மொழியில் வேறு அர்த்தம் வருகிறது. வினோதினியை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications