நடிகைனா “ஈசியா” போச்சா? மன உளைச்சல்.. சில்லறையை எண்ணி சாப்பிட்டோம் - பணம் கிடைத்ததாக வினோதினி பதிவு
சென்னை: தனது வீட்டில் பணத்தை திருடிய பெயிண்டரிடம் இருந்து இலகுவதாக அதை போலீசார் பெற்றுத்தந்துவிட்டதாக ட்விட்டரில் நடிகை வினோதினி பதிவிட்டு உள்ளார். சினிமா துறையில் இருக்கும் எல்லோருக்கும் பணம் எளிமையான விசயமல்ல என்றும் அவர் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து பதிவிட்டு உள்ள அவர், "என்னிடமிருந்து ரூ.20000 களவாடிய பெயிண்டரிடமிருந்து அந்த பணத்தை காவல்துறை நேற்று பெற்றுத்தந்தது. பணம் பறிபோன அன்றிலிருந்து எனக்கு இருந்த மன உளைச்சல் முக்கியமாக எதற்கென்றால் - நாம் ஒருவர் கண்ணிற்கு, அதுவும் இதே அபார்ட்மெண்டில் மேல் வீட்டிற்கு வேலை செய்து கொடுத்தவர் கண்ணிற்கு, ஒரு எளிய இலக்காக தென்பட்டிருக்கிறோமென்று தான்.

எல்லோரும் நினைப்பது, சினிமாவில் இருப்பவர்கள் பல லட்சம் பல கோடி சொத்து வைத்திருப்பார்கள். இது பல நேரத்தில் உண்மையாகவும் இருக்கலாம், ஏனெனில் அதிக பணம் புழங்கும் இடங்களில் சினிமாவும் ஒன்று. ஆனால், எல்லோரிடமும் அப்படி இருப்பதில்லை. அதுமட்டுமில்லாது, இங்கு நிரந்தர சம்பளம் என்று கிடையாது. அதனால், சேமிப்பு மற்றும் கவனமாக செலவழித்தல் மிக அவசியமாகிறது.
நமக்கு முன்னிருந்த சினிமா நடிகர் நடிகையர்கள் பணம் விஷயத்தில் செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது உசிதம். எனது தாயும் தந்தையும் பத்து ரூபாய் சம்பாதிப்பதற்கு எப்படியெல்லாம் சிரமப்பட்டனர் என்பதைக் கண்கூடாக பார்த்தவள் நான். கல்லூரியில் ஆண்டு விடுமுறையிலும் லீவு இல்லாமல் கூடுதல் பயிற்சி/பயிற்சி/மொழிபெயர்ப்புகள்/திருத்தங்கள் என என் தாய் ஓடியதும், மழையில் உடைந்த குடையோடு என் தந்தை வேலைக்கு சென்றதெல்லாம் மறக்க முடியாது.
நான் பெங்களூருவில் படித்த காலத்தில் மாதக் கடைசியில் நானும் என் ரூமில் தங்கியிருந்த இரு பெண்களும் சில்லறையை எண்ணி எடுத்துக்கொண்டு சாப்பிட செல்வோம். 20000 இவளுக்கெல்லாம் பெரிய தொகையில்லை, இதற்கெல்லாம் போலீஸ் வரைக்கும் போக மாட்டார்கள் என்று அந்தத் திருடன் ஊகித்திருப்பான்.
எனக்கு என் பணத்தை மிக மிக எளிமையாக பேசி வாங்கிக்கொடுத்த E4 அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷன் தலைமைக் காவலர் திரு அன்பழகன் ஐயா அவர்களுக்கும் உதவியாக இருந்த திரு பாலமுருகன் அவர்களுக்கும் திரு பி சுரேஷ் அவர்களுக்கும் சிரம்தாழ்ந்த நன்றிகள். மேலும் ரூ 5000 களவாடிய மற்றொரு நபர் இந்த வாரம் பணத்தைத் திரும்பத் தருவதாகக் கூரியுள்ளார். பார்ப்போம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்ததாவது, ""சென்ற வாரம் என்னிடமிருந்து 2 நபர்கள் மொத்தம் 25000 ரூ திருடிவிட்டனர். (தனித்தனியே நடந்த இரு சம்பவங்கள்). இருவர் மீதும் போலீஸ் கம்ப்ளையிண்ட் தரப்பட்டு இந்த வாரத்திற்குள் பணத்தைத் திரும்பத் தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை.
'
அவர்கள் இருவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இல்லையென்றாலும், ஒரு வகையான அன்னாடங்காச்சிகள் தான். ஒருவர் வீட்டு பெயிண்டர். மற்றொருவர் மெக்கானிக். தேவைக்காக பணம் திருடிவிட்டனர். CCTV வீடியோ இருந்ததால் ஒருவர் ஒப்புக்கொண்டார். மனைவியின் நம்பருக்கு அழைத்து கழுவி ஊத்தியதாலும் அந்த மனைவியுடன் இவர் இப்பொழுது வாழாததாலும் மற்றொருவர் ஒப்புக்கொண்டார்.
இருவரும் நன்றாக வேலை செய்யக்கூடியவர்கள். சொல்லப்போனால் அந்த மெக்கானிக்கை எங்களுக்கு பல வருடங்களாகத்தெரியும். அந்த பெயிண்டர் தனியாக பிராஜெக்ட் வாங்கியும், அர்பன் கம்பெனி என்ற கார்ப்பரேட்டிலும் ஒப்பந்த வேலைப் பார்க்கிறவர். சாதாரணமாக, இப்படிப்பட்டவர்கள் உழைத்து சாப்பிடவே நினைப்பார்கள். பின் தங்கிய நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் இதுபோன்றவர்கள் தங்களது குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் பல குறிக்கோள்களோடு வாழ்வர்.
தனது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த கடுமையாக உழைப்பார்கள். பின் இவர்களை (அதாவது களவுக்குப் பரிச்சயமில்லாதவர்களை) எது திருடத்தூண்டுகிறது? இன்றைய காலகட்டமும், நாம் வாழும் சமூகச்சூழலும்தானே. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மாநில வரிகள், பணவீக்கம், பெட்ரோல் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, தரமற்ற பொருட்கள், பெரும் ஏழை பணக்காரர் இடையிலான பாகுபாடு, அதிக வட்டி விகிதம் என்று பொது மக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஏழைக்குடும்பத்திற்கு கூட சென்னை போன்ற metroவில் மாதம் 20-25000 ரூ தேவைப்படுகிறது. இதில் அதிக நேர வேலை, traffic, அதனால் ஏற்படும் உடல் மற்றும் மனக்கோளாறுகள், சம்பளங்கள் சரியான நேரத்திற்கு வராத பிரச்சனைகள், கார்ப்பரேட்டுகளுடைய ஊழியர்களாக வேலை செய்யும் டெலிவரி ஊழியர்கள், விற்பனை பிரதிநிதிகளுடைய உழைப்பைச்சுரண்டி கமிஷன் போக அவர்களுக்கு பிச்சைப்போடுவதுபோல் சம்பளம் தரும் போக்கு என இன்னும் காரணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இனிவரும் காலங்களில் மனிதனை மனிதன் வயிற்றுப்பசிக்காக அடித்துக்கொல்லும் வாய்ப்பும் உள்ளது. அப்படி நடந்தால் அதில் ஒரே நல்ல விஷயம் - அப்பொழுதாவது, சாதி மதம் ஒழிந்து அடுத்த வேளை சாப்பாடு/தண்ணி/காற்று உள்ளவன் - இல்லாதவன் என்ற இரண்டே பிரிவுகளாக நிற்போம். கொரோனாவுக்கு பிந்தைய பணவீக்கம், கொரோனாவ ஏற்படுத்திய பொருளாதார தாக்கம், கோவிட், மருத்துவ கட்டண உயர்வு, மருத்துவ பொருட்கள் பற்றாக்குறை போன்றவை சாதாரண மக்கள் திருடர்களாக மாறுவதற்கான இன்னும் சில காரணங்களாக உள்ளன." என்று குறிப்பிட்டு இருந்தார்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications