Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகையின் படுக்கையறையில் சிக்கிய "பொருள்".. இரவில் நுழைந்த போலீஸ்! பலே சொத்து! சிக்கும் பிரபலம் இவரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த வழக்கில் பிரபல நடிகை வின்சி நிவேதா உட்பட 8 பேரை போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்... கஞ்சா புழக்கம் சினிமா வட்டாரத்தில் அதிகமாக உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்த நிலையில், இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் அதே திரையுலகில் நடந்துள்ளது பரபரப்பை தந்துள்ளது.. என்ன நடந்தது? யாரிந்த நடிகை?

சென்னை வடபழனி மற்றும் சாலிகிராம் பகுதிகளில் உள்ள சினிமா பிரபலங்களுக்கு மெத்தாம்பெட்டமின் மற்றும் உயர் ரக கஞ்சா விநியோகிக்கப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது..

Actress Luxury Assets Bundles of Cash Bedroom Secret

இந்த தகவலின் அடிப்படையில், போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் உடனடியாக களமிறங்கினர்.. முதலில் நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்துள்ளனர்..

சென்னை நடிகை சொத்து

விக்னேஸ்வரன் தந்த தகவலின் பேரில் கோவூர் வெங்கடேஷ்குமார் கார்த்திக் ராஜா மற்றும் யஷ்வந்த் ஆகியோரை வளசரவாக்கம் பகுதியில் வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து சொகுசு கார் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, விசாரணை அடுத்த கட்டமாக நகர்ந்ததில், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஸ்ரீராம் நடராஜன், கோவிலம்பாக்கத்தில் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த விபின்ஷா ஆகியோர் சிக்கினார்கள்.. இதில் விபின்ஷாவின் செல்போன் நம்பர்களை ஆய்வு செய்த போதுதான், நடிகை வின்சி நிவேதாவின் பெயர் அடிபட்டது..

வடபழனியில் வசித்து வருகிறார் வின்சி நிவேதா.. இவருக்கு விபின்ஷா போதைப்பொருள் சப்ளை செய்திருப்பதற்கான ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளன.. இதற்கு பிறகே நடிகையின் வீட்டிற்கள் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியிருக்கிறார்கள்..

நடிகையின் படுக்கையறை பொருள்

நடிகையின் படுக்கையறையிலேயே போதைப்பொருட்கள் இருந்துள்ளன.. அவைகளை கைப்பற்றிய போலீசார் நடிகையிடம் விசாரணை மேற்கொண்டனர்..

அப்போது நடிகையின் தோழி, நடிகை அஞ்சு கிருஷ்ணன் என்பவர் பெயர் அடிபட்டது.. இவருடன் இணைந்துதான், பெங்களூரு, கேரளாவில் இருந்து போதைப்பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து சென்னையில் உள்ள சினிமா நபர்களுக்கு இந்த 2 நடிகைகளும் விற்பனை செய்து வந்தார்களாம்.. இதற்காகவே வடபழனியில் தனியாக ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்துள்ளனர்..

2 நடிகைகள் - வாடகை வீடு

சப்ளை எப்போது வரும்? யார் யாருக்கு விநியோகிப்பது? என்றெல்லாம் இந்த வீட்டில்தான் 2 நடிகைகளும் ரகசியமாக கூட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.. எனினும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக இந்த வீட்டில் , அஞ்சு கிருஷ்ணனை குடியிருப்புவாசி போல தங்க வைத்துள்ளார்..

தற்போது 2 நடிகைகள் உட்பட 8 பேர் கைதாகி உள்ளனர்.. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மெத்தாம்பெட்டமின் கஞ்சா மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடிகையின் செல்போனில் இருந்த கஸ்டமர் லிஸ்ட்டை ஆய்வு செய்த போது அவருடன் தொடர்பில் இருந்த பல முன்னணி சினிமா பிரபலங்களின் பெயர்களும் சிக்கியிருக்கிறதாம்.. இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கதி கலங்கும் திரைத்துறை

போதைப்பொருள் வாங்கிய மற்ற நபர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். சினிமாவில் நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டிய இளம் நடிகை போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இணைந்து கைதாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரியை சேர்ந்தவராம் வின்சி நிவேதா.. கம்ப்யூட்டர் சயின்ஸ் மாஸ்டர் டிகிரி படித்துள்ளார்.. எப்படியோ சினிமா ஆசை இவருக்குள் வந்துள்ளது.. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்துள்ளார்..

யாரிந்த நடிகை - பின்னணி என்ன

ஒரு குறும்பட இயக்குநர் மூலம் போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு சில படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தாலும் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் வருமானத்திற்காக கட்டுமான நிறுவனம் மற்றும் கஸ்டமர் சர்வீஸ் சென்டர்களிலும் வேலை பார்த்து வந்துள்ளார்.. அப்போதும்கூட போதிய பணம் கிடைக்காததால்தான், என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளார்.

இதற்கு பிறகே தன்னுடைய நண்பர் விபின்ஷா மற்றும் தோழி அஞ்சு கிருஷ்ணனுடன் சேர்ந்து போதைப்பொருள் வியாபாரியாக மாறினாராம் நடிகை.. இதன் மூலம் குறுகிய காலத்தில் பல லட்சங்கள் சம்பாதித்துள்ளார்.. இதுவே நடிகைக்கு ஒரு போதையாகிவிட்டது...

அதிலும், சினிமா பிரபலங்களுக்கு முழுநேர போதை பொருள் வியாபாரியாகவே வின்சி நிவேதா மாறிப்போயிருக்கிறார்.. இப்போது ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.... இவரெல்லாம் என்ன கல்வி கற்று என்ன பயன்????

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+