பாஜகவுக்கு எதிராக மெகா மூவ்.. ஆட்டம் காட்டும் எதிர்க்கட்சிகள்.. உண்மையான பலம் என்ன? இதான் கணக்கு!
சென்னை: பாஜகவுக்கு எதிரான கட்சிகள் இன்று பாட்னாவில் ஒருங்கிணைந்து ஆலோசித்துள்ளன. 2023 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவோம் என சூளுரைத்துள்ள இந்தக் கட்சிகளின் தற்போதைய பலம் என்ன தெரியுமா?
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஒன்று திரண்ட தலைவர்கள்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் இமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டம் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பலத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இன்று பாஜகவுக்கு எதிராக பாட்னாவில் ஒன்று திரண்ட அரசியல் கட்சிகளின் தற்போதைய பலம் என்ன என்பதை பார்க்கலாம்.
எதிர்க்கட்சிகளின் பலம்: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை - 4,053

இன்றைய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் 17 அரசியல் கட்சிகள் பங்கேற்றன. இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட 6 முதலமைச்சர்களும், 6 முன்னாள் முதலமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் பலம்:
காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தற்போது 4 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் - 723
நாடாளுமன்ற உறுப்பினர்கள் - 52
தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுகவுக்கு மொத்தமுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் - 139
நாடாளுமன்ற உறுப்பினர்கள் - 24
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் - 226
நாடாளுமன்ற உறுப்பினர்கள் - 23
ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு மொத்தமுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் - 46
நாடாளுமன்ற உறுப்பினர்கள் - 16
ஆத் ஆத்மி கட்சிக்கு மொத்தமுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் - 161
நாடாளுமன்ற உறுப்பினர்கள் - 1
ராஷ்ட்ரிய ஜனதா தளம் மொத்தமுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் - 79
நாடாளுமன்ற உறுப்பினர்கள் - 16
ஒட்டுமொத்த பலம்: பாஜக - 1,365
காங்கிரஸ் - 723
இடதுசாரி கட்சிகள் - 116
ஆம் ஆத்மி - 161
மாநில கட்சிகள் - 1,679
இந்தியாவில் மொத்தமுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 545
இதில் பாஜக 303 சீட்களை கையில் வைத்து அறுதிப் பெரும்பான்மையுடன் உள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 53 எம்.பி சீட்களை மட்டுமே கையில் வைத்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 24 எம்.பிக்களுடன் திமுக, 23 எம்.பிக்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.
எனினும் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 38% வாக்குகளைப் பெற்றிருந்தது. மீதமுள்ள 62% வாக்குகளை பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகள் பங்கிட்டுக்கொண்டன. இதனால் தான் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்தால் பாஜகவை எளிதில் வீழ்த்த முடியும் என கருதப்படுகிறது.
அதேபோல, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாஜக 1,365 இடங்களையும், காங்கிரஸ் 723 சீட்களையும் கொண்டுள்ளது. மாநில கட்சிகள் 1,679 இடங்களை வைத்திருக்கின்றன. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி, மாநிலக் கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்தால் பாஜகவை வீழ்த்திவிடலாம் எனக் கணக்கு போடுகின்றன எதிர்க்கட்சிகள்.
-
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
10 தொகுதிக்கு குறையக்கூடாது.. 3 காரணங்களுடன் மோத தயாரான விசிக.. திமுகவுக்கு அடுத்த நெருக்கடி -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications