கூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Recommended Video

    சிறப்பு டிஜிபி மீது பெண் ஐபிஎஸ் பாலியல் புகார் மீது விசாரணை... தமிழக அரசு அதிரடி!

    டெல்டா மாவட்டத்தில் எஸ்.பியாக பணியாற்றும் இளம் பெண் ஐபிஎஸ் ஒருவர் தமிழக சட்டம் ஒழுங்கு பிரிவின் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது கொடுத்த பாலியல் சீண்டல் புகார் பெரிய பூதாகரமாகி உள்ளது.

    Additional DGP Rajeshdas sexual harassment case transferred to CBCID: DGP Tripathi

    பிரச்சனை வெளிவந்த உடனேயே புகாரை விசாரிக்க 6 பேர் கொண்ட கமிட்டியை தமிழக அரசு அறிவித்தது. அதோடு ராஜேஷ்தாஸ் வகித்து வந்த பதவியிலிருந்து நீக்கி விட்டு அவரைக் காத்திருப்புப் பட்டியலில் வைத்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டார். அத்துடன் அந்த பொறுப்புக்கு ராஜேஷ்தாஸுக்குப் பதிலாக ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டார்.அவரும் உடனடியாக பதவியை ஏற்றார்.

    தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால்தான் சிறப்பு டிஜிபியாக ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்கு முன்பே ராஜேஷ்தாஸின் பதவி அதுவும் பாலியல் சீண்டல் புகார் காரணமாக பறிக்கப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

    ஒடிசாவைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜேஷ்தாஸ், 1989-ல் தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியானார். இவர் ஒரியா, இந்தி, ஆங்கிலம், தமிழ் என 4 மொழிகளில் புலமை பெற்றவர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற டிஜிபி வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ ராணி தம்பதியினரின் மகளான முன்னாள் சுகாதாரச் செயலாளர் பீலாவை காதலித்து திருமணம் செய்தவர் ராஜேஷ்தாஸ். இவரை பற்றி பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+